மகாலய அமாவாசை; திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் கடற்கரையில் இன்று மகாலய  அமாவாசை தினத்தை முன்னிட்டு ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்து தங்கள் முன்னோர்களை வழிபட்டு வருகின்றனர்.

mahalaya amavasai huge number of devotees special prayer in tiruchendur murugan temple vel

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு சிறந்த நாட்களாக தை அம்மாவாசை  மற்றும் ஆடி அமாவாசை, புரட்டாசி மாதம் வரக்கூடிய மகாலய அமாவாசை  தினங்கள் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. மேலும் இந்த அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டால் அவர்களின் பரிபூரண ஆசி கிடைக்கும்  என்று கருதப்படும் நிலையில் நீர் நிலைகள் உள்ள பகுதிகளான ஆற்றுப்பகுதி மற்றும் கடற்கரை பகுதியில் அமர்ந்து தர்ப்பணம் கொடுத்து தங்கள் முன்னோர்களை வழிபடுவது  வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் இன்று புரட்டாசி மகாலய அமாவாசை தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள  ஏராளமானோர் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கடற்கரையில் குவிந்துள்ளனர். அவர்கள் அனைவரும் கடலில் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்து தங்கள் முன்னோர்களுக்கு எள் மற்றும் தர்ப்பபுள், வைத்து, பிண்டம் வளர்த்து தர்ப்பணம் கொடுத்து தங்கள் முன்னோர்களை வழிபட்டு வருகின்றனர்.

நவராத்திரி விழாவில் சாகசம் செய்ய முயன்ற மாணவியின் முகத்தில் தீ பற்றியதால் பரபரப்பு
 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

பின்னர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் மகாலய அமாவாசையை முன்னிட்டு இன்று கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு நான்கு முப்பது மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும் 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios