மகா சிவராத்திரி 2024 : கேட்ட வரம் கிடைக்க.. சிவனருள் பெற கண்டிப்பாக இந்த விரதம் இருங்க!

மகா சிவராத்திரி அன்று விரதம் இருந்து வழிபட்டால் சிவன் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

maha shivratri 2024 date time shiva puja procedure and viratham rules and its benefits in tamil mks

மகா சிவராத்திரி என்பது இந்துக்களின் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றாகும். இது சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பண்டிகையாகும். இது ஒவ்வொரு மாதமும் வரும் சிவராத்திரியில் இருந்து வேறுபட்டது மற்றும் சிவனை வழிபடுவதையும் உள்ளடக்கியது. புராணத்தின் படி சிவபெருமான் தனது தாண்டவ நிறுத்தியத்தை நிகழ்த்தும் இரவு மகாசிவராத்திரி ஆகும். மற்றொரு புராணக்கதை, மகாசிவராத்திரி நாள் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் திருமணத்தை குறிக்கிறது.

maha shivratri 2024 date time shiva puja procedure and viratham rules and its benefits in tamil mks

மகா சிவராத்திரி 2024 சிறப்பு:
மகா சிவராத்திரி அன்று இரவில் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் பாவம் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். நினைத்த காரியம் கைகொடும். அதுமட்டுமின்றி, வாழ்க்கையில் செய்த கர்ம வினை பயனை அளிக்க எட்டு விதமான சிவ வழிபாட்டு பூஜைகளை பின்பற்ற வேண்டும் என்று புராணம் சொல்லுகிறது.

இதையும் படிங்க:  மகா சிவராத்திரி அன்று உடலுறவு வைத்துகொள்ளலாமா? புராணம் என்ன சொல்கிறது..

மாசி மாதம் வரும் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி திதி அன்று கூடிவரும் மகா சிவராத்திரி விரதத்தை கடைபிடித்தால் கூடுதல் பலனளிக்கும் என்பது நம்பிக்கை. உங்களால் சிவனுக்கு வருடம் முழுவதும் விரதம் இருந்து வழிபாடு நடத்தவிட்டாலும், மகாசிவராத்திரி அன்று விரதம் இருப்பது நல்ல பலனை கொடுக்கும். ஆக, இந்த விரதத்தை நீங்கள் மகா சிவராத்திரிக்கு முந்தைய தினமே கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக விரதம் இருக்கும் நாளில் ஒரு வேளை மட்டுமே உணவு சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

maha shivratri 2024 date time shiva puja procedure and viratham rules and its benefits in tamil mks

மகா சிவராத்திரி 2024 தேதி மற்றும் நேரம்:
மகா சிவராத்திரி பொதுவாக பிப்ரவரி பிற்பகுதி அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் வருகிறது. 2024 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி மார்ச் 8,  வெள்ளிக்கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது. மகா சிவராத்திரி பூஜைக்கான நல்ல நேரம் 12:07 முதல் 12:56 வரை.

இதையும் படிங்க:  மகா சிவராத்திரி 2023: சிவ பூஜையில் ஒருபோதும் இந்த 5 பொருட்களை வைக்கக் கூடாது.. ஏன் தெரியுமா?

மகா சிவராத்திரி எப்படி கொண்டாடப்படுகிறது?  
நாடு முழுவதும் மகாசிவராத்திரி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. மகாசிவராத்திரி அன்று பக்தர்கள் சிவன் கோவிலுக்கு சென்று சிவ அர்ச்சனை செய்து சிவலிங்கத்திற்கு பால் நெய் போன்ற பொருட்களை படைக்கிறார்கள் அவர்கள் ஒரு நாள் முழுவதும் விரதம் கடைப்பிடிக்கிறார்கள், மறுநாள் விரதத்தை முறித்துக் கொள்கிறார்கள். பெரும்பாலான இந்திய பாரம்பரிய பூஜைகள் பகலில் நடத்தப்படுகின்றன. ஆனால், மகா சிவராத்திரி பூஜை இரவில் செய்யப்படுகிறது.

maha shivratri 2024 date time shiva puja procedure and viratham rules and its benefits in tamil mks

விரதம் இருக்கும் முறை:
ஒளிமயமான சிவராத்திரி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, நெற்றியில் விபூதி இட்டு கொள்ளுங்கள். பிறகு பூஜை அறையில் இருக்கும் சிவபெருமானின் படத்திற்கு முன்பாக தீபத்தை ஏற்றி விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். விரதம் கடைபிடிக்கும் நாளில் இரவு பகல் உணவு ஏதும் சாப்பிடக்கூடாது, தண்ணீர் மட்டும் குடிக்கலாம். மேலும் சிவனை நினைத்து மனம் உருகி ஜெபிக்க வேண்டும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

விரத பலன்கள்:
மகா சிவராத்திரியில் சிவனை நினைத்து மனம் உருகி விரதம் இருந்தால் செல்வ செழிப்போடு வாழ்க்கையில் முன்னேறலாம். அதுமட்டுமின்றி, விரதம் இருப்பவர்கள் நற்கதி அடைவதோடு சொர்க்க லோகத்தையும் சேரும் பாக்கியமும் அவர்களுக்கு கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் உங்களது எல்லா தோஷங்களும் நிவர்த்தியாகி வாழ்க்கையில் வளம் உண்டாகும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios