ஆகஸ்ட் 26 இஸ்கான் கோயிலில் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா.. மிஸ் பண்ணிடாதீங்க..!!
Sri Krishna Janmashtami 2024 : சென்னை இஸ்கான் கோயிலில் நாளை மறுநாள், அதாவது ஆகஸ்ட் 26ஆம் தேதி, 2024 ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமியைக் கொண்டாடம் தொடங்கவுள்ளது.
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (ISKCON), சென்னை ECR -இல் உள்ள ISKCON கோவிலில் ஆகஸ்ட் 26, 2024 அன்று ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழாவை கொண்டாடப்போவதை அறிவிப்பதில் உற்சாகம் அடைகிறது.
கிருஷ்ணரின் 5251-வது பிறந்தநாளை முன்னிட்டு, மாலை 6 மணிக்கு சம்பிரதாய அபிஷேகமும், அதைத் தொடர்ந்து நள்ளிரவில் மகா அபிஷேகமும் நடைபெறும். இந்த புனித சடங்கின் போது, அவர்களின் திருவுருவங்களுக்கு பால், தேன், தயிர், நெய் மற்றும் பழச்சாறுகளின் கலவையான பஞ்சாமிர்தத்தில் அபிஷேகம் செய்யப்படும். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் உள்ளன. பிரமாண்டமான கொண்டாட்டத்தை உறுதி செய்ய அர்ப்பணிப்புள்ள குழு அயராது உழைத்துக் கொண்டிருக்கிறது. விழாவின் சிறப்பம்சமாக நள்ளிரவில் மகா அபிஷேகம் நடைபெறும்.
இதையும் படிங்க: பணம் வீடு தேடி வர கிருஷ்ண ஜெயந்தியில் இந்த ஒரு பொருளை படைத்தால் போதும்!!
மகா அபிஷேகத்துடன், விழாவில் பல்வேறு பக்திச் செயல்கள், சொற்ப்பொழிவுகள் , ஆரத்தி, கீர்த்தனைகள், சுவையான பிரசாதம் மற்றும் பல நிகழ்ச்சிகள் இருக்கும். பக்தர்கள் மகா அபிஷேகத்தில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.
இதையும் படிங்க: கிருஷ்ண ஜெயந்தி அன்று கண்டிப்பாக பார்க்க வேண்டிய கோவில்களின் லிஸ்ட் இதோ!
பண்டிகை உற்சாகத்துடன், அகர்பத்தி, விக்ரகங்கள், உடைகள், குழந்தைகள் உடைகள், பைகள், அணிகலன்கள் மற்றும் பல்வேறு பொருட்களை வழங்கும் பரிசுக் கடைகள் இருக்கும். பலவிதமான சாத்வீக உணவை வழங்கும் கோவிலில் உள்ள சுத்த சத்வா உணவுகள் பக்தர்களுக்கு வழங்கப்படும். பகவான் கிருஷ்ணரின் தெய்வீகத் தோற்றத்தைக் கொண்டாட அனைவரும் சென்று கண்டுகளியுங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D