தீபாவளியை முன்னிட்டு ஒளிமயமாக மாறிய அயோத்தி ராமர் கோயில்!
அயோத்தியில் கும்பாபிஷேக விழாவிற்கு பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேக விழாவிற்கு முன்னதாக, தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் ராமர் கோயில் விழாக்கோலத்தில் காட்சி அளிக்கிறது. கட்டுமானத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயிலின் ஒளிமயமான உட்புறக் காட்சிகளின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில், அயோத்தி ராமர் கோவில் 'தீபோத்சவ்' நிகழ்ச்சிக்காக சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் அயோத்தி தீபத்ஸவ விழாவில் ஆரத்தி நிகழ்ச்யில் கலந்துகொண்டிருக்கிறார்.
இதற்கிடையில், அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் ஜனவரி 22ஆம் தேதி நடைபெறும் கும்பாபிஷேகம் அனைவருக்கும் மகிழ்ச்சியான தருணம் என்று கூறியுள்ள ஆர்எஸ்எஸ் அந்த நாளை பண்டிகையாகக் கொண்டாட நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
தீபாவளிக்குத் தங்கம் வாங்கப் போறீங்களா? டிஜிட்டல் கோல்டு ஆஃபரைப் பாத்துட்டு பர்சேஸ் பண்ணுங்க!
"அயோத்தியில் நமது வணக்கத்திற்குரிய பகவான் ஸ்ரீராமரின் பிரம்மாண்டமான கோவில் கட்டப்பட்டு, சிலை பிரதிஷ்டை விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. நம் அனைவருக்கும் இது மகிழ்ச்சியான தருணமாக இருக்கும். பல வருட முயற்சியால், அயோத்தியில் நமது பகவான் ஸ்ரீராமருக்கு பிரம்மாண்டமான கோவில் கட்டப்படுகிறது" என்று ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த சுனில் அம்பேகர் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள மக்கள் அந்தந்த பகுதிகளில் அருகிலுள்ள கோயில்களுக்குச் சென்று இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்கவும் கேட்டுக்கொண்டிருக்கிறார். "இது ஒரு பண்டிகைக்கான சந்தர்ப்பமாக இருக்கும். அனைவரும் அயோத்திக்கு செல்லமுடியாவிட்டாலும், தங்கள் அருகில் உள்ள கோவில்களுக்குச் சென்று கொண்டாடுவார்கள். இரவில், அனைவரும் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும்" என்று அம்பேகர் கூறியுள்ளார்.
கும்பாபிஷேக விழாவிற்கு பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாடல் அழகி தாரிணியைக் கைப்பிடித்த ஜெயராமின் மகன் காளிதாஸ்! கோலாகலமாக நடந்த நிச்சயதார்த்தம்!