Asianet News TamilAsianet News Tamil

Vastu Tips : ஒரே இரவில் நீங்கள்பணக்காரராக... இந்த பரிகாரத்தை மட்டும் செய்யுங்கள்..!!

வாஸ்து சாஸ்திரத்தின் படி, பித்தளை பரிகாரங்கள் செய்வதன் மூலம் உங்கள் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கி, வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய ஆரம்பிக்கும்.

how to use brass to remove negative energy in your life as per vastu
Author
First Published Jul 19, 2023, 9:00 PM IST

மனித வாழ்வில் வாஸ்து சாஸ்திரத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் வாஸ்து சாஸ்திரத்தில் மனித வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு சிறிய பிரச்சனையையும் தீர்க்க பல விதிகள் மற்றும் பரிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வாஸ்து சாஸ்திரத்தில் பித்தளை பாத்திரங்களுக்கு விசேஷ முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்று சொல்லலாம். பித்தளை பாத்திரங்கள் மங்களகரமானதாக கருதப்படுகிறது. பித்தளை பாத்திரங்கள் தொடர்பான பரிகாரங்கள் உங்கள் அதிர்ஷ்டத்தை ஒரே இரவில் மாற்றும் என்று நம்பப்படுகிறது. அதன் படி, இத்தொகுப்பில் நீங்கள் பெறக்கூடிய பித்தளை தொடர்பான சில பரிகாரங்களை நீங்கள் செய்வதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

பித்தளை பாத்திரம் தொடர்பான பரிகாரங்கள்:
மன அழுத்த நீங்க:

வாஸ்து படி, மன அழுத்த பிரச்சனையை நீக்க, பித்தளை பாத்திரங்கள் தொடர்பான இந்த பரிகாரம் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதற்காக, நீங்கள் தினமும் இரவு தூங்கும் முன் பித்தளை பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி உங்கள் அருகில் வைத்து கொள்ளுங்கள். பின் காலையில் எழுந்தவுடன் அந்த தண்ணீரை மரம் அல்லது செடிக்கு ஊற்றிவிடுங்கள். இதனால் உங்கள் மன் அழுத்தம் நீங்கும்.

வீட்டில் அமைதி பெற:
வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டில் அமைதி காக்க, லட்சுமியின் முன் பித்தளை விளக்கில் சுத்தமான நெய் தீபம் ஏற்ற வேண்டும். இதைச் செய்தால், உங்கள் வீட்டில் அமைதி நிலவும். மேலும் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் விரைவில் நிறைவேறும் என்று கூறப்பட்டுள்ளது. எப்போதும் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கும்.

இதையும் படிங்க: உங்கள் பூஜை பாத்திரங்கள் பளபளன்னு மின்ன வேண்டுமா..? அப்படினா..இதை ஒருமுறை தயார் செய்து பயன்படுத்தினாலே போதும்

எதிர்மறை சக்தி நீக்க:
உடலில் இருக்கும் எதிர்மறை சக்தியை நீக்க, இரவில் பித்தளை பானையில் தண்ணீரை நிரப்பி, இரவில் தூங்கும் போது உங்கள் அருகில் வைத்து, காலையில் எழுந்ததும், இந்த தண்ணீரை ஒரு மரத்திற்கு வழங்கவும். இதனால் எதிர்மறை குணம் உங்களிடமிருந்து விலகத் தொடங்கும்.

நிதி பிரச்சனை:
வாஸ்து சாஸ்திரத்தின்படி, உங்களுக்கு பொருளாதாரச் சிக்கல் இருந்தால், சுத்தமான நெய்யை பித்தளை பாத்திரத்தில் வைத்து கிருஷ்ணருக்கு படைக்கவும். அதன் பிறகு இந்த நெய்யை ஏழைகளுக்கு விநியோகிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதைச் செய்வதன் மூலம், உங்கள் நிதிப் பிரச்சனைகள் ஒரு சில நாட்களில் மறைந்துவிடும். இதைச் செய்வதன் ஒரே இரவில் நீங்கள் பணக்காரர் ஆகலாம்.

இதையும் படிங்க: Vastu Tips: இனி கிழிந்த பர்ஸை தூக்கி எறியாதீங்க...இப்படி செஞ்சி பாருங்க..பண மழை பொழியும்..!!

அலுவலகம் பிரச்சனை:
உங்கள் வேலைகளில் ஏதேனும் இடையூறுகள் ஏற்பட்டால், உங்கள் வேலைகள் மோசமாகிவிட்டால், உங்கள் வேலையை முடிக்க முடியவில்லை என போன்ற அலுவலகம் தொடர்பான பிரச்சனை இருந்தால், நீங்கள் ஒரு பித்தளை கோப்பை அல்லது கிண்ணத்தில் உளுத்தம் பருப்பை தண்ணீரில் ஊறவைத்து, அதை நீங்கள் தூங்கு தலையணைக்கு அருகில் வைக்கவும் இரவு முழுவதும் அப்படியே இருக்கவும். 
அதன் பிறகு காலை அதில் வெல்லம்  பசுவிற்கு கொடுக்கவும். இதைச் செய்வதன் மூலம் உங்கள் அதிர்ஷ்டம் திறக்க ஆரம்பித்து உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய ஆரம்பிக்கும். 

Follow Us:
Download App:
  • android
  • ios