அஷ்டமி நாளில் சுப காரியங்களை தவிர்ப்பது ஏன் தெரியுமா..? காரணம் இது தான்!
அஷ்டமி நாளில் எந்தவொரு சுப காரியங்களையும் செய்ய கூடாது என்று சொல்லுவதற்கான காரணங்கள் என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
அஷ்டமி என்பது பைரவரை வழிபடும் நாளாகும். வளர்பிறை அஷ்டமியில் கால பைரவர் அல்லது சொர்ண பைரவரை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம்.
அஷ்டமி நவமி நாட்களில் சுப காரியம் செய்யக் கூடாதா?
இந்து மதத்தில் அஷ்டமி நவமி நாட்களில் மக்கள் நல்ல காரியங்கள் செய்வதில்லை. சொல்லப் போனால், இரண்டு நாள்களிலும் சுப காரியங்களை செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
சக்தி வாய்ந்த அஷ்டமி திதி:
உண்மையில், அஷ்டமி திதி ரொம்ப சக்தி வாய்ந்தது. மேலும் இந்நாளில் அதுவும் ராகு காலம் போன்ற நேரத்தில் விளக்கேற்றி பைரவரை வழிபட்டால், எப்பேர்பட்ட துன்பமும் சிட்டாக பறந்து போய் விடும். இப்படி சக்தி வாய்ந்ததாக சொல்லப்படும் அஷ்டமி நாளில் ஏன் சுபகாரியங்கள் செய்யக் கூடாது என்று முன்னோர் சொல்கிறார்கள் என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம்.
அஷ்டமியில் ஏன் சுபகாரியங்கள் செய்யக் கூடாது?:
அஷ்டமி நாளில் கிருஷ்ணர் பிறந்ததால் அதை 'கோகுலாஷ்டமி' என்றும், ராமர் பிறந்த நவமி நாளை 'ராமநவமி' என்றும் கொண்டாடுகிறோம். இப்படி பார்த்தால் அஷ்டமி, நவமியை கொண்டாடதான் வேண்டும். ஆனால், ஏன் அந்நாளை கொண்டாடாமலும், சுபகாரியங்களையும் செய்யாமல் தள்ளி வைக்கிறார்கள், ஏன் அஷ்டமியில் நாளில் எந்த ஒரு புதிய காரியத்தையும் தொடங்க வேண்டாம் என சொல்லுவதற்கு என்ன காரணம். இதற்கெல்லாம் முழு விளக்கம் இப்போது பார்க்கலாம்.
அஷ்டமியில் சுப காரியங்கள் செய்யாததற்கு காரணங்கள்:
இந்த உலகத்தில் இருக்கும் எல்லா ஜீவராசிகளுக்கும் அத்தியாவசியமாக உணவுவும், உறைவிடம் உண்டு. அதிலும் குறிப்பாக, மனிதனுக்கு தான் உணவு, உடை போன்ற எல்லா விதமான செல்வங்களும் ஐஸ்வர்யங்களும் தேவைப்படுகின்றது. இவற்றை அள்ளி தருபவர்கள் தான் அஷ்டலட்சுமிகள். இதனால் தான் எல்லாவற்றிற்கும் லட்சுமி கடாட்சம் வேண்டும் என்று ஆன்மீகம் சொல்லுகிறது.
பொதூவாகவே, லட்சுமி தேவி என்றாலே எல்லார் கண் முன் வருவது செல்வம் தான். ஆனால் உண்மையில், மகாலட்சுமி மட்டுமின்றி, அவளோடு சேர்த்து 8 லட்சுமிகள் அருள் பாலிக்கின்றனர். தைரியம், தானியம், சந்தானம் என மனிதனின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான 16 விதமான செல்வங்களை அருளுகிறவர்கள் தான் அந்த எட்டு லட்சுமிகள்.
இதையும் படிங்க: சித்ரா பௌர்ணமிக்கு மட்டுமே இங்கு செல்ல முடியும்.. கண்ணகி கோயில் வரலாறு தெரியுமா?
பைரவரை வணங்கும் அஷ்டலட்சுமிகள்:
தைரிய லட்சுமி உங்களுடன் இருந்தால் மற்ற அனைத்து லட்சுமிகளும் தானாகவே உங்களை தேடி வந்துவிடுவார்கள். ஆனால், இந்த எட்டு லட்சுமிகளும் சிவ ரூபமான சொர்ண பைரவரிடம் தான் அருளை பெற்று அப்படி கிடைத்த அருட்சக்தியை கொண்டு தான் உலக உயிருக்கு அளிக்கின்றனர். மேலும், இந்த அஷ்ட லட்சுமிகள், அஷ்டமி திதியில் தான் பைரவரை வழிபட்டு, பூஜை செய்து தங்களது சக்திகளை கூட்டிக் கொள்வதாக நம்பப்பட்டு வருகிறது. இன்னும் சொல்ல போனால்,,அஷ்ட லட்மிகளின் அருள் பெருகும் நாள் தான் அஷ்டமி ஆகும்.
இதையும் படிங்க: முளைப்பாரி வழிப்பாடு எதற்கு தெரியுமா..? இதன் பின்னணி என்ன..?
அஷ்ட லட்சுமிகள் பைரவர் வழிபடுவது ஏன்?
அஷ்டமி நாளில் தான் அஷ்ட லட்சுமிகள் எல்லோரும் பைரவர் வழிபாட்டில் ஈடுபடுவதால், அந்நாளில் செய்யப்படும் யாகம், பூஜை, ஹோமம், திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்கும் 8 லட்சுமிகள் தங்களின் அருளை கொடுக்க முடியாதாம். அஷ்டலட்சுமிகள் அருள் கிடைக்கா விட்டால் அந்த காரியம் எப்படி மங்களகரமாக நடக்கும்? எனவேதான், அஷ்டமி திதி அன்று சுப காரியங்கள் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகின்றது.
மேலும், அஷ்டமி நாளில் நாம் பைரவர் வழிபாடு செய்தால் எல்லா விதமான ஐஸ்வரியமும் கிடைக்கும். தீயசக்திகள் கூட விரட்டியடிக்கப்படும் என்பது ஐதீகம். ஆனால், நம் வாழ்வில் நல்லது பெருக வேண்டுமென்றால், தேய்பிறையை விட வளர்பிறைக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எனவே, அப்படி வளர்பிறையில் வரும் அஷ்டமி நாட்களில் பைரவரை வழிபாடு செய்தால், நீங்கள் செய்த பாவங்கள், தீமைகள் அடியோடு அழிந்து நல்லது கிடைக்கும் என்று ஆச்சாரியார்கள் கூறுகின்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D