பிணம் நாற்றம் எடுக்காது... காசியின் ஐந்து அதிசயங்கள் என்னென்ன?
இத்தொகுப்பில் நாம் கங்கை கரையில் இருக்கும் ஐந்து அதிசயங்கள் பற்றி பார்க்கலாம்..
அன்று வாழ்ந்த அரகர்கள் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப காசியில் ஐந்து சிறப்பம்சங்களை செய்ததாக கூறப்படுகிறது. அந்த ஐந்தும் மனித குலத்திற்கு கிடைத்த மிகப்பெரும் வரப்பிரசாதம் ஆகும். அதன்படி, கங்கை கரையில் இருக்கும் அந்த ஐந்து அதிசயங்கள் என்ன என்பதை குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
கங்கை கரையில் இருக்கும் 5 அதிசயங்கள்:
பல்லி சத்தம் கேட்காது:
உங்களுக்கு தெரியுமா காசியில் பள்ளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும் ஆனால் அவை ஒருபோதும் சத்தம் போட்டது கிடையாது. பொதுவாகவே பள்ளியின் சத்தம் சகுனமாக கருதப்படுகிறது. அதனால்தான் என்னவோ காசியில் பல்லியின் சத்தத்திற்கு இடமில்லை.
இதையும் படிங்க: இல்லத்தில் மங்களம் பொங்க... தப்பி தவறி கூட வெள்ளிக்கிழமை இவற்றை செய்யாதீங்க..!!
பிணம் நாற்றம் வராது:
நீங்கள் பிணம் எரியும் சமயத்தில் அருகில் நின்றிருக்கிறீர்களா? ஏன் இப்படி கேட்கிறேன் என்றால், பிணம் பிணத்தை எரிக்கும் போது அதிலிருந்து வரும் வாடையை வார்த்தையால் கூற முடியாது. அந்த அளவிற்கு மோசமாக இருக்கும். ஆனால் இங்கு பிணத்தை எரிக்கும் போது எந்தவிதமான துர்நாற்றமும் வராது. என்ன ஒரு ஆச்சரியம்!
இதையும் படிங்க: வீடு க்ரிஹ பிரவேசம் செய்யும் முன் "இந்த" விஷயங்களை செய்ய மறக்காதீங்க... அப்போ தான் லட்சுமி குடியிருப்பாள்..!!
கருடன் வராது:
உங்களுக்கு தெரியுமா? காசியில் பிணங்கள் எரிக்கப்பட்டாலோ அல்லது உணவுகள் சிதறி கிடந்தாலும் இரைக்காக ஒருபோதும் கருடன் அங்கு வருவதில்லை. ஆனால் கருடன் அங்கே பறந்து செல்லும். மேலும் அங்கு காக்கைகளும் கிடையாது.
பூவில் வாசனை வராது:
இது உங்களுக்கு கேட்க விசித்திரமாக தான் இருக்கும் ஆனால் அதுதான் உண்மை. அது என்னவென்றால், இங்கு விளையும் சாமந்திப் பூவில் வாசம் வராது. குறிப்பாக காசியில் இந்தப் பூக்கள் அதிகமாக கிடைக்கும். ஆனாலும் அவற்றில் ஒருபோதும் வாசம் வருவதில்லை. சொல்லப்போனால் அவை காகிதப்பூ போல் இருக்கும். ஆனால் வெளியூரில் விளையும் இந்த பூவை காசிக்கு கொண்டு வந்தால் அவை மணக்கும். ஆனால் காசியில் இருக்கும் இந்த சாமந்திப்பூவோ விளையும் போதே மணப்பதில்லை.
பசுக்களிடம் விசித்திர குணம்:
உங்களுக்கு தெரியுமா இங்கு இருக்கும் பசுக்கள் கடவுளை விட அதிகமாக மதிக்கப்படுகிறது. இங்கிருக்கும் பசுக்கள் ஒருபோதும் கட்டப்படுவதில்லை. அதுபோல் இங்கு இருக்கும் பசுக்கள் மனிதர்களை முட்டாது. குறிப்பாக இங்கு இருக்கும் பசுவை யாரும் துன்புறுத்துவதில்லை.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஆண்டுகள் பல கடந்தும் இன்று வரை இந்த ஐந்து அற்புத விஷயங்கள் இயற்கையாகவே நடந்து கொண்டிருக்கிறது..