தேனியில் வெகு விமரிசையாக நடைபெற்ற ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

தேனி அல்லிநகரத்தில் அருள்மிகு ஸ்ரீ பேடி ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

hanuman temple kumbabishekam held very well in theni district

தேனி மாவட்டம் தேனி நகரில் உள்ள அல்லிநகரம் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ பேதி ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயில். இந்த திருக்கோயிலில் புனரமைப்பு பணிகள் முடிவு பெற்றதைத் தொடர்ந்து கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக ஆலய வளாகத்தில் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலையில் நெய் வஸ்திரம் பூர்ணாகதி சமர்ப்பிக்கப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது.

பின்னர் புனித கலச நீர் அடங்கிய கும்பத்திற்கு பூஜைகள் நடத்தப்பட்டு வேதாச்சாரியார்கள் புனித கலச நீரை தலையில் சுமந்து கொண்டு விமான கலசத்தை அடைந்தனர். பின்னர் கோபுரத்தில் மேல் ஒற்றை கலசத்திற்கு பூஜைகள் நடத்தி புனித கலச நீரை போற்றி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது அதனை தொடர்ந்து கலசத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டது.

பின்வாசல் வழியாக ஓடுவதும், ரயிலில் ஏறி செல்வதும் முதல்வருக்கு புதிதல்ல - கொட்டும் மழையில் அண்ணாமலை பேச்சு

பின்னர் கூடி இருந்த ஏராளமான பொதுமக்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. ஆலயம் உள்ளவரான ஆஞ்சநேயருக்கு புனித கலச நீர் ஊற்றி தீபாராதனை காட்டப்பட்டது இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios