Asianet News TamilAsianet News Tamil

மே1 முதல் குரு பெயர்ச்சி ஆரம்பம்... குரு தோஷம் உள்ளவர்கள் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது தெரியுமா..?

ஒருவரது ஜாதகத்தில் குரு பலம் மிகவும் முக்கியமானது. உங்கள் ஜாதகத்தில் குரு வலுவாக இல்லாவிட்டால் குரு பெயர்ச்சி அன்று பரிகாரம் செய்ய வேண்டியவர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள கோவிலுக்கு செல்லுங்கள்..

guru peyarchi 2024 guru dosham pariharam must visit this temple to get rid of guru dosham in tamil mks
Author
First Published Apr 29, 2024, 11:38 AM IST

இந்து மதத்தில் ஜாதகம் மற்றும் ஜோதிடத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒருவரது ஜாதகத்தில் கிரகத்தின் நிலையைப் பொருத்து அவரது எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. முக்கியமாக கிரகங்களில் சிறப்பாக கருதப்படுவது,  வியாழன். ஒருவரது ஜாதகத்தில் வியாழன் இருக்கும் நிலையைப் பொறுத்தே அவரது பெரும்பாலான வேலைகள் முடிவு செய்யப்படுகின்றன. ஜாதகத்தில், வியாழன் வலுவாக இல்லாவிட்டால் அந்த நபரது வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும். குருபலன் இல்லாமல் ஒருவர் எதுவும் செய்ய முடியாது என்கின்றனர் ஜோதிட நிபுணர்கள். எனவே குரு பலன் ஒருவருக்கு மிகவும் அவசியம்.

இந்நிலையில், மே 1ஆம் தேதி புதன்கிழமை அன்று குரு பெயர்ச்சி  நடைபெறவுள்ளது. ஒருவரது ஜாதகத்தில் குரு தோஷம் இருந்தால், குரு பெயர்ச்சி அன்று பரிகாரம் செய்ய வேண்டியவர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள கோவிலுக்கு சென்றால் குரு பலம் பெறுவார் என்பது ஐதீகம். சரி வாங்க இப்போது அது குறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்..

இதையும் படிங்க: குரு பெயர்ச்சி 2024 : அதிர்ஷ்டம் அடிக்கப் போகும் ராசி இவர்கள்தான்...யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்..?!

குரு பெயர்ச்சிக்கு பரிகாரம் செய்ய செல்ல வேண்டிய கோயில்கள்:

வலிதாயநாதர் கோயில்: இந்த கோயில் சென்னை பாடியில் உள்ளது. ஜாதகத்தில் குரு தோஷம் உள்ளவர்கள் குருபெயர்ச்சி அன்று இந்த கோயிலுக்கு சென்று வழிபடுங்கள். ஏனெனில், குருபகவானுக்கு பரிகாரம் செய்வதற்கு இந்த கோயில் புனிதமாகக் கருதப்படுகிறது.

வசிஷ்டேஸ்வரர் கோயில்: தஞ்சாவூரில் அமைந்துள்ள இந்த கோயில் குரு பரிகாரம் செய்ய உகந்ததாகக் கருதப்படுகிறது. இந்த கோயிலில் சிவபெருமானும் பார்வதி தேவியும் காட்சி தரும் நிலையில், அவர்களுக்கு நடுவில் குருபகவான் ராஜகுருவாக காட்சி தந்தார். இப்படி காட்சி தரும் குருபகவானை வணங்கினால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

ஆபத்சகாயேஸ்வரர் கோயில்: திருவாரூரில் இருக்கும் இந்த கோயில் குரு பரிகாரம் செய்ய புனித தலம் ஆகும். இந்த கோயிலில் குரு பகவான் தட்சிணாமூர்த்தியாக காட்சி தருகிறார்.  இப்படி காட்சி தரும் குரு பகவானை  24 முறை வலம் வந்து, 24 தீபங்கள் ஏற்றி வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

மயூரநாதர் கோயில்: மயிலாடுதுறையில் அமைந்துள்ள இந்த கோயில் காசிக்கு நிகரான புனித ஸ்தலமாக கருதப்படுகிறது. இந்த கோயிலில் தட்சிணாமூர்த்தியாக காட்சி தரும் குரு பகவானை வழிபட்டால் குரு தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம் ஆகும்.

இதையும் படிங்க:  மே 1 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகும் குரு; பண மழையில் நனைய தயாராக இருங்கள்!

பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயில்: சிவகங்கையில் உள்ள இந்த கோவிலில் ஒவ்வொரு  வியாழக்கிழமை அன்றும், தட்சிணாமூர்த்தியையும், கோயிலுக்கு பின்புறம் இருக்கும் ஆலமரத்தையும் வழிபட வேண்டும். பின் 12 முறை அந்த மரத்தை சுற்றி வந்தால் குரு தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

ஸ்ரீவைகுண்டம் ஆழ்வார் திருநகரி கோயில்: தூத்துக்குடியில் இருக்கும் இந்த கோயிலில் நவ திருப்பதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. குருவாக ஆதிநாத பெருமாள் காட்சி தரும் இந்த கோயிலில் அவரை வணங்கினால் குரு தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

திருச்செந்தூர் முருகன் கோயில்: இந்த கோயில் அறுபடை வீடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கோயிலில் தட்சிணாமூர்த்தியாக காட்சி தரும் குரு பகவானை வணங்கினால் தோஷங்கள் நீங்கி, ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

கைலாச நாதர் கோயில்: தூத்துக்குடியில் அமைந்துள்ள இந்த கோயில் நவ கைலாயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கோயிலில், கைலாச நாதர் குருவின் அம்சமாக உள்ளதால், இவரை வணங்கினால் குரு தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Follow Us:
Download App:
  • android
  • ios