திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்கிறீர்களா? உகந்த நேரம் இதோ...!
சிவபெருமானின் அக்னிதலமாக கருதப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், வரும் ஐப்பசி பௌர்ணமிநாளில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பௌர்ணமிநாளில் திருவண்ணாமலைப் பாதையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்து உண்ணாமலையுடன் கூடிய அண்ணாமலையாரை வழிபடுவர். நினைத்த மாத்திரத்தில் முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பின்புறம் 2,668 அடி உயரம் கொண்ட மலையாக சிவபெருமான் அமர்ந்துள்ளதாக ஐதீகம்.
பஞ்ச பூதங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். திருவண்ணாமலை, சிவபெருமான் அக்னி வடிவிலும், அன்னை உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும் ஸ்லமாகவும் திருவண்ணாமலை திகழ்கிறது.
திருவண்ணாமலையின் மலைப்பாதை 14 கிலோ மீட்டர் சுற்றுப் பாதையை கொண்டது. மாதந்தோறும் பௌர்ணமி நாட்களில் திரளான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடுவர். தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து கிரிவலம் சென்று அண்ணாமலையாரை வழிபடுகின்றனர்.
ஒன்றாக வருகிறது பௌர்ணமியும் கிரகணமும்… இந்தாண்டு அன்னாபிஷேகம் எப்போது? முழு விவரம் உள்ளே!!
வரும் ஐப்பசி பௌர்ணமிநாளான நாள் (8-11-2022) மிகப் பிரசித்தி பெற்ற பௌர்ணமிதிருநாளாக விளங்குகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஐப்பசி மாத பௌர்ணமிநாளில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதத்திற்கான ஐப்பசி பௌர்ணமிஇன்று 7ஆம் தேதி மாலை 4.44 மணிக்கு தொடங்கி மறுநாளான 8ஆம் தேதி மாலை 4.48 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரின் அருள்பெற உகந்த நேரம் என கோவில் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.