Asianet News TamilAsianet News Tamil

கிருஷ்ண பக்தர்களுக்கு குட் நியூஸ்!  25 மார்ச் அன்று கௌர பூர்ணிமா விழா... கிருஷ்ணர் அருளைப் பெற்று மகிழுங்கள்!

ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணா கோவிலில் வரும் 25 மார்ச் அன்று கௌர பூர்ணிமா விழா வெகு கொண்டாடப்படுகிறது.

gaura purnima festival 2024 celebration on 25 march in iskcon temple in chennai in tamil mks
Author
First Published Mar 21, 2024, 11:14 AM IST

இஸ்கான் சென்னை கௌர பூர்ணிமா விழா 25 மார்ச் 2024 திங்கட்கிழமை அன்று, இஸ்கான் ஸ்ரீ ராதா கிருஷ்ணா கோயில் வெகு விமரிசையாக நடைபெறும். இது பக்தி, மகிழ்ச்சி மற்றும் ஆன்மீக ஞானத்தின் கொண்டாட்டமாகும். குறிப்பாக இந்த ஆண்டு திருவிழா ஒரு துடிப்பான மற்றும் ஆன்மாவைத் தூண்டும் நிகழ்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கலந்து கொள்ளும எல்லா மக்களையும் தெய்வீக மற்றும் மகிழ்ச்சியான சூழ்நிலையில் மூழ்கடிக்கும்.

கௌர பூர்ணிமா ஏன் இவ்வளவு சிறப்பு?
வேதத்தின்படி,  தங்க நிறத்திற்குப் பெயர் பெற்ற ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவான பரமாத்மாவான ஸ்ரீ கிருஷ்ணருக்கு இந்நாள் மங்களகரமான நாளாக கருதப்படுகிறது. அவர் பக்தித் தொண்டின் முக்கியத்துவத்தையும், கடவுளின் புனித நாமங்களான ஹரே கிருஷ்ணா மஹா மந்திரத்தையும் சபையில் உச்சரிப்பதற்காக இந்த வடிவில் வெளிப்பட்டார் என்று கூறப்படுகிறது. 

இந்த விழாவின் சிறப்புகள் என்ன?
ஸ்ரீ ஸ்ரீ கவுர நிதை மகா அபிஷேகம், தெய்வங்கள் சம்பிரதாய ஸ்நானம், திருவிழாவின் முக்கிய சிறப்பம்சமாக இருக்கும். அதுமட்டுமின்றி, தெய்வீக அருள் மற்றும் ஆசீர்வாதங்களின் வெளிப்பாட்டைக் குறிக்கும் இந்த புனிதமான மகா அபிஷேகத்தில் பக்தர்கள் கலந்துகொண்டு கிருஷ்ணரின் அருளை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவானது மாலையில் கௌரா ஆரத்தியுடன் முடியும். குறிப்பாக சைதன்ய பகவானுக்கு தீவிர பிரார்த்தனைகளை வழங்கப்படும். அதைத் தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் கொடுக்கப்படும்.

கௌர பூர்ணிமா விழா நடைபெறும் சிறப்பு நேரங்கள்: 
காலை 4.30 மணிக்கு - மங்கள ஆரத்தி
காலை 7.45 மணிக்கு - சிருங்கர் ஆரத்தி
காலை 8 மணிக்கு - ஸ்ரீமத் பாகவதம் வகுப்பு
காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை - கீர்த்தனை மேளா
மாலை 5:30 மணிக்கு - ஸ்ரீ ஸ்ரீ கவுர நிதை அபிஷேகம்
மாலை 6:15 மணிக்கு - சைதன்ய கரிதாமிர்தம் குறித்த வகுப்பு
இரவு 7:00 மணிக்கு - கவுரா ஆரத்தி
இரவு 7:30 மணிக்கு - அனுகல்ப பிரசாதம் (தானியம் அல்லாதது)

எனவே, கௌர பூர்ணிமாவின் இந்த மகிழ்ச்சியான கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பக்தியில் மூழ்கி, பகவான் சைதன்யாவின் தெய்வீக பிரசன்னத்தின் மாற்றும் சக்தியை அனுபவியுங்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios