நடராஜர் தன்னுடைய நடனத்தால் சிறப்பித்த ஐந்து திருத்தலங்கள், பஞ்ச சபைகள்’ என்றும், ‘ஐம்பெரும் சபைகள்’ என்றும் அழைக்கப்படுகின்றன.
ஆதியும் அந்தமும் இல்லாத சிவபெருமானின் திருக்கோலங்களில் முக்கியமானது நடராஜர் திருக்கோலம். இந்த பிரபஞ்சத்தில் இயக்கவியலை நடன திருக்கோலத்தின் மூலம் வெளிப்படுத்தும் அற்புத வடிவம் தான் நடராஜர் வடிவம்.. சிவபெருமானின் லிங்க வடிவத்திற்கு ஆண்டு முழுவதும் பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடந்தாலும், நடராஜர் திருவடிவத்திற்கு ஒரு ஆண்டில் 6 தினங்கள் மட்டுமே அபிஷேகங்கள் நடைபெறும். அதன்படி மாசி சதுர்த்தசி, சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை ஆகிய தினங்களில் மட்டுமே நடராஜர் ரூபத்திற்கு அபிஷேகங்கள் நடைபெறும். எனவே இந்த தினங்களில் சிவபெருமானின் அபிஷேகங்களை கண்டால் துன்பங்கள் நீங்கும் என்பது ஐதீகம்..
நடராஜர்தன்னுடையநடனத்தால்சிறப்பித்தஐந்துதிருத்தலங்கள், பஞ்சசபைகள்’ என்றும், ‘ஐம்பெரும்சபைகள்’என்றும்அழைக்கப்படுகின்றன. சிதம்பரம், மதுரை, திருவாலங்காடு, திருநெல்வேலி, குற்றாலம்ஆகியஇந்த 5 திருத்தலங்கள் தான் அவை. இவை முறையேபொற்சபை, வெள்ளிசபை, ரத்தினசபை, தாமிரசபை, சித்திரசபை, என்றுவகைப்படுத்தப்பட்டுள்ளன.
வெள்ளிசபை
சிவபெருமானின்திருவிளையாடல்கள்பெரும்பாலும்நடைபெற்றஇடமாகமதுரைதிருத்தலம்திகழ்கிறது. மீனாட்சிஅம்மனின்அரசாட்சியும், அருளாட்சியும்நிறைந்திருக்கும்மதுரையில்தான்மதுரைமீனாட்சி-சுந்தரேஸ்வரர்கோவில்உள்ளது. இந்தஆலயம்தான்நடராஜரின்திருநடனம்கண்ட ‘வெள்ளிசபை’யாகதிகழ்கிறது. இது ‘வெள்ளியம்பலம்’, ‘வெள்ளிமன்றம்’ என்றும்அழைக்கப்படுகிறது.
இந்தஆலயத்தில்அருள்பாலிக்கும்நடராஜப்பெருமான், தன்பக்தனானபாண்டியமன்னனின்வேண்டுகோளுக்குசெவிசாய்த்து, வலதுகாலைஊன்றி, இடதுகாலைதூக்கிநடனம்புரியும்நிலையில்காட்சிதருகிறார். இங்கு சிவபெருமானின் நடனம் ‘சந்தியாதாண்டவம்’ என்றுஅழைக்கப்படுகிறது. பதஞ்சலிமற்றும்வியாக்ரபாதமுனிவர்களுக்கு, தில்லையில்காட்டியதுபோலவேஇங்கும்இறைவன்தனதுதிருநடனத்தைகாட்டிஅருள்செய்தார்.
சித்திரசபை
தென்காசிமாவட்டம்திருக்குற்றாலத்தில் குற்றாலநாதர்திருக்கோவில் அமைந்துள்ளது. இதுஅகத்தியமுனிவர்வழிபாடுசெய்ததிருத்தலம்ஆகும். இங்குசிவபெருமான்நடனம்புரிந்தஇடம், ‘சித்திரசபை’ என்றுவணங்கப்படுகிறது. இங்குஎமனைகாலால்எட்டிஉதைத்தஈசன்தன்மனைவிபார்வதியுடன், மார்கண்டேயருக்குஅருளியபடிசித்திரவடிவில்காட்சியளிக்கிறார். இங்குஇறைவன்ஆடியநடனத்திற்குப்பெயர் ‘திரிபுரதாண்டவம்’ என்பதாகும்.
இந்ததாண்டவத்தைகண்டுகளித்தபிரம்மதேவன், தானேஇறைவனின்திருநடனத்தைஓவியவடிவில்வடித்ததாககருதப்படுகிறது. அந்தஇடமேசித்திரசபை. இது‘சித்திரஅம்பலம்’, ‘சித்திரமன்றம்’ என்றும்அழைக்கபப்டுகிறது.
பொற்சபை
கடலூர்மாவட்டம்சிதம்பரத்தில்உள்ளது, திருமூலட்டநாதர்ஆலயம். ஆனால் இந்த பெயர் பலருக்கும் தெரியாது.. சிதம்பரம்நடராஜர்கோவில்என்றுசொன்னால்தான்பெரும்பாலானவர்களுக்குத்தெரியும். இங்குஅருள்பாலிக்கும்ஆடல்அரசனானநடராஜர்வீற்றிருக்கும்இடமே, ‘பொற்சபை’ என்றுஅழைக்கப்படுகிறது. இதனை ‘பொன்னம்பலம்’, ‘கனகசபை’, ‘பொன்மன்றம்’ என்றபெயர்களாலும்அழைப்பார்கள்.
இறைவன்தனதுதிருநடனத்தை, பதஞ்சலிமற்றும்வியாசமுனிவர்களுக்குகாட்டிஅருளியதலம்இதுவாகும். இந்ததலத்தில்நடராஜர், தனதுஇடதுகாலைஊன்றி, வலதுகாலைத்தூக்கிநடனம்ஆடுகிறார். இத்தலஇறைவன்ஆடும்நடனம் ‘ஆனந்தத்தாண்டவம்’ ஆகும்.
தாமிரசபை :
திருநெல்வேலிமாவட்டத்தில்இருக்கும்முக்கியமானதிருத்தலங்களில்ஒன்று, காந்திமதிஉடனாயநெல்லையப்பர்திருக்கோவில். இங்குநடராஜர்தனிச்சன்னிதியில்வீற்றிருக்கும்இடத்திற்கு ‘தாமிரசபை’ என்றுபெயர். இதற்கு ‘தாமிரஅம்பலம்’, ‘தாமிரமன்றம்’ என்றபெயர்களும்உண்டு. இந்தசபையில், இறைவன்தன்இடதுகாலைஊன்றிவலதுகாலைத்தூக்கிதிருநடனம்புரிகின்றார். இந்தநடனத்திற்கு ‘திருத்தாண்டவம்’ என்றுபெயர்.
ரத்தினசபை
திருவள்ளூர்மாவட்டம்திருவாலங்காட்டில்உள்ளது, வடாரண்யேஸ்வரர்திருக்கோவில். இந்தஆலயத்தில்காளியுடன்போட்டிநடனம்ஆடியசிவபெருமான், முடிவில்தன்னுடையஒருகாலைதலைக்குமேல்தூக்கிஆடி, காளிதேவியைவெற்றிகொண்டார்என்றுதலபுராணம்சொல்கிறது. இந்தஆலயத்தின்இறைவன் - வடாரண்யேஸ்வரர், இறைவி - வண்டார்குழலிஅம்மை. இங்குஇறைவன்நடனம்ஆடியஇடம் ‘ரத்தினசபை’ எனப்படுகிறது.
இந்த நோக்கத்திற்காக தான் அம்மனுக்கு பொங்கல் படைக்கிறார்களாம்...தெரிஞ்சுக்கோங்க...!
‘ரத்தினஅம்பலம்’, ‘மணிமன்றம்’ என்றபெயர்களும்இதற்குஉண்டு. இங்குள்ளஇறைவன்எட்டுகரங்களுடன், வலதுகாலைதரையின்ஊன்றிஇடதுகாலால்காதணியைமாட்டும்தோரணையில்காட்சியளிக்கின்றார். காரைக்கால்அம்மையார், தன்தலையால்நடந்துசென்று, இங்குள்ளநடராஜரின்திருவடியில்அமர்ந்து, அனுதினமும்அவரதுதிருநடனத்தைக்காணும்பேறுபெற்றார். இங்குஇறைவன்ஆடும்நடனம் ‘ஊர்த்துவதாண்டவம்’ என்றுபோற்றப்படுகிறது...
