இந்த நோக்கத்திற்காக தான் அம்மனுக்கு பொங்கல் படைக்கிறார்களாம்...தெரிஞ்சுக்கோங்க...!

அம்மனுக்கு பொங்கல் படைப்பதன் நோக்கம் என்ன என்பதைக் குறித்து இங்கு பார்க்கலாம்.

know the purpose of pongal prasadam to amman in tamil mks

பொதுவாகவே, மார்கழி 1 பிறந்து விட்டாலே, அன்றிலிருந்து பொங்கல் வரும் நாளை கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்போம். அந்நாளில், சமைக்கப்படும் ஒரு அற்புதமான உணவு பொங்கல் ஆகும். மேலும் இந்த பொங்கலானது, விசேஷ தினங்களில் மட்டும்தான் செய்வார்கள். இன்றும் பல கிராமங்களில் பொங்கல் வைத்து படையல் இட்டு, மாவிளக்கு, காப்பரிசி செய்து கிராமத்தில் உள்ள அனைவருக்கும் அதை பிரசாதமாக கொடுப்பது வழக்கம். பின் அவர்கள் அந்த பிரசாதத்தை மன மகிழ்ச்சியுடன் உண்டு மகிழ்வார்கள். 

ஒவ்வொரு மாசி மாதங்களில் இந்த வழக்கமானது, தஞ்சையை ஒட்டிய கிராமப்புறங்களில் இன்றும் நடைமுறையில் உள்ளது. இதனை, "மாரியம்மன் பொங்கல்" என்று சொல்லுவார்கள். அதுபோல பிற 
எல்லா ஊர் மற்றும் மாநிலங்களில் ஆடி மாதத்தில் பொங்கல் வைத்து அம்மன் வழிபாடு செய்வது, நம் பழக்க வழக்க பண்பாடுகளில்  பின்பற்றப்படும் ஒரு மரபு ஆகும். 

பொதுவாகவே பொங்கல் என்பது, ஒவ்வொரு வருடமும், கோயில்களில் கொண்டாட்டத்துடன் நடத்தும் ஒரு சடங்கு ஆகும். பொங்கலானது, கோயிலில் மட்டுமல்ல, விசேஷ நாட்களில் வீட்டு முற்றத்திலும் படைக்கின்றனர். மேலும், பக்தர்கள்  தேவியின் நாமங்களைச் சொல்லிக்கொண்டே பொங்கல் படைக்கின்றனர். மக்கள் தங்கள் வெற்றி, தோல்வி, ஆசைகளை விவரித்து ஆறுதல் அடைவது இதன் பயன் ஆகும்..

இதையும் படிங்க:  சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வீட்டில் இந்த அறிகுறிகளை பார்த்தால், லட்சுமி தேவி ஆசீர்வாதம் கிடைப்பது நிச்சயம்!

அதுபோல், பெண்கள் பய பக்தியுடனும் விசுவாசத்துடனும் பொங்கல் படைக்கும்போது பானைகளில் கொதித்து பொங்கி வழிவது அகம் என்ற நம்பிக்கை ஆகும். கடைசியில் அது நைவேத்தியமாக மாறுகிறது. கடும் வெப்பம், மூச்சு திணற வைக்கும் புகை, ஓசை நிறைந்த சூழ்நிலை முதலியவை பெண்களில் அன்றாட வாழ்க்கையின் சோதனைகளையும் இக்கட்டான நிலைகளையும் சமாளிக்கும் திறனை காட்டுகிறது.
அதுமட்டுமின்றி, மண் பானையில் பொங்கல் வைப்பது நன்மை பல கிடைக்கும். அதுபோல், சமைக்கும் உணவில் உள்ள அசுத்தங்களை மண் பானை உறிஞ்சி எடுக்கும் என்பது அறிவியல் உண்மை.

இதையும் படிங்க:   காளி அம்மனுக்கு எலுமிச்சம்பழ மாலை அணிவிப்பது ஏன் தெரியுமா?

இப்படி எல்லா விசேஷ தினங்களில் பொங்கல் படைப்பதன் நோக்கத்தைப் நாம் புரிந்து கொண்டால் அதில் பல தத்துவங்கள் இருப்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். குறிப்பாக, அன்னை தேவீக்கு பொங்கல் படைத்து அனைவரும் அக மகிழ்வார்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios