Aadi Month | ஆடி மாசம் தொடங்கியாச்சு! மதுரை அம்மன் கோவில்களுக்கு ஒரு நாள் டூர் போலாமா? முழு தகவல் இதோ..!
ஆடி மாதம் தொடங்கியுள்ள நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உட்பட சுற்றுவட்டாரத்தில் உள்ள 6 அம்மன் கோவில்களுக்கு ஆன்மிக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு டூரிசம் சார்பில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆடி மாதம் தொடங்கியுள்ள நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உட்பட சுற்றுவட்டாரத்தில் உள்ள 6 அம்மன் கோவில்களுக்கு ஆன்மிக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு டூரிசம் சார்பில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு டூரிசம் அதிகாரிகள் தெரிவிக்கையில், கடந்த ஆண்டு ஆடி மாத்தில் இந்த அம்மன் கோவில் சுற்றுலா ஆரம்பிக்கபட்டதாகவும், வெள்ளிக் கிழமைகளில் மட்டுமே இயக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் இந்த ஆண்டு முதல் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் ஒரு நாள் அம்மன் கோவில் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த சுற்றுலா அழகர்கோவில் சாலையில் உள்ள டூரிசம் அலுவலகத்தில் இருந்து தொடங்கும் இந்த சுற்றுலா மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தெப்பக்குளம் மாரியம்மன் கோவில், மடப்புரம் காளி அம்மன் கோவில், வெட்டனேரி வேட்டுடையார் காளி அம்மன் கோவில், தாயமங்களம் முத்துமாரியம்மன் கோவில் மற்றும் இறுதியாக அழகர்கோவில் ராக்காயி அம்மன் கோவிவுடன் இந்த சுற்றுலா முடிவடைகிறது.
Aadi Velli: ஆடி முதல் வெள்ளி; சமயபுரத்தில் நீண்ட வரிசையில் நின்று அம்மனை மனம் உருகி வழிபடும் பக்தர்கள்
நல்ல வசதியான இரு இருக்கைகள் கொண்ட சொகுசுப் பேருந்தில் காலை 8.30 மணிக்கு தொடங்கும் இந்த அம்மன் கோவில் சுற்றுலா இரவு 7.45 மணிக்கு முடிகிறது. விருப்பமுள்ள பக்தர்கள் வரும 16ம் தேதி வரை TTDC இணையதளத்தில் டிக்கெட்-ஐ பதிவு செய்து கொள்ளலாம். மூத்தகுடிமக்களுக்கு எந்த வித பிரத்தியேக சலுகைகளும் கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடி வெள்ளி நாளில் வரும் சுக்கிரவார பிரதோஷம்; கடன் பிரச்சினை தீர்க்கும் பசும்பால் அபிஷேகம்!!