Asianet News TamilAsianet News Tamil

மறந்தும் கூட வெள்ளிக்கிழமை இதையெல்லாம் செய்யக்கூடாது.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

வெள்ளிக்கிழமை செய்யக்க்கூடாத விஷயங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். 

Dos and don'ts on friday. You should never do this on a Friday.. You know what?
Author
First Published Aug 10, 2023, 10:30 AM IST

பொதுவாக வெள்ளிக்கிழமை என்பது புனிதமான நாளாக கருதப்படுகிறது. வெள்ளிக்கிழமை என்பது தெய்வங்களுக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. எனவே வெள்ளிக்கிழமைகளில் அசைவ உணவு சாப்பிட கூடாது, முடி வெட்டக்கூடாது, நகம் வெட்டக் கூடாது, பணம் கொடுக்க கூடாது என அடுக்கிக்கொண்டே போகலாம். அந்த வகையில் வெள்ளிக்கிழமை வீட்டில் சில தவறுகளை செய்தால், கண்ணுக்கு தெரியாத தோஷங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே இந்த தவறுகளை மீண்டும் செய்யாமல் இருப்பது நம் குடும்பத்திற்கு நல்லது. எனவே வெள்ளிக்கிழமை செய்யக்க்கூடாத விஷயங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். 

வெள்ளிக்கிழமை என்றாலே வீட்டில் உள்ள பெண்கள் தலைக்கு குளிப்பார்கள். ஆனால் அன்றைய தினம் வீடு முழுவதும் முடி  உதிராமல் பார்த்துக் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமையன்று வீடு முழுவதும் உதிராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீடு முழுவதும் முடி சிதறிக் கிடந்தால், அது வீட்டிற்கு நல்லதல்ல. எனவே தலைக்கு குளித்த பின், நன்கு துவட்டி விட்டு, முடியின் நுனியில் முடிச்சுப் போட்டுக்கொண்டால் நல்லது. 

50 ஆண்டுகளுக்கு பிறகு உருவான கஜலக்ஷ்மி ராஜயோகம்: இந்த ராசிக்காரர்கள் காட்டில் பணமழை தான்!

வாரத்தின் மற்ற நாட்களில் குளிக்காமல் சமைத்தால் பிரச்சனை இல்லை. ஆனால் முடிந்த வரை, வெள்ளிக்கிழமைகளில் மட்டும் குளித்து விட்டு தான் நாம் சமைக்க வேண்டும். ஏனெனில் அக்னிதேவருக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். வேறு வழியில்லை. எனினும் எங்கள் காலையில் 6 மணிக்கு சமையல் தொடங்க வேண்டும், தலைக்கு குளிக்க நேரமில்லை என்றூ சொல்பவர்கள் கங்கா சனம் எடுத்துக் கொள்ளலாம். பல் துலக்கி முகம் கழுவிய பின் கையில் சிறிது தண்ணீரை எடுத்து கங்காதேவியை நினைத்து அந்த நீரை தலையில் தெளிக்கவும். அதன் பிறகு சமையல் வேலையை தொடங்கலாம்.

அதே போல் வெள்ளிக்கிழமை அன்று புதிய ஆடைகளைத் துவைக்கக் கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது. புது ஆடைகள் அணியலாம். ஆனால் அந்த புதிய துணியை தண்ணீரில் துவைக்க வேண்டாம். புதிய துணிகளை துவைக்க உகந்த நாளாக ஞாயிற்றுக்கிழமை கருதப்படுகிறது.

மற்ற நாட்களை போலவே நாம் வெள்ளிக்கிழமையிலும் வீட்டை பெருக்கி வெள்ளிக்கிழமை மட்டுமின்றி எந்த நாளிலும் வீட்டை சுத்தம் செய்வோம். ஆனால் வெள்ளிக்கிழமையன்று கூட்டி பெருக்கும் வேலையை பாதி வழியில் நிறுத்தக் கூடாது என்கிறது சாஸ்திரம். உதாரணமாக, வீட்டை கூட்டும் போது பாதியிலேயே விட்டுவிட்டு சமையல் செய்யப் போவது, யாரேனும் அழைத்தால் அவர்களுடன் பேசிவிட்டு மீண்டும் வந்து வீட்டை கூட்டுவதை கட்டயாம் செய்யக் கூடாது.

வெள்ளிக்கிழமை.நாம் கையால் யாருக்கும் உப்பு கொடுக்கக்கூடாது என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்கும். வெள்ளிக்கிழமையன்று உப்பு நம் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது. ஆனால் வெள்ளிக்கிழமையில் இக்கட்டான சூழ்நிலையில் ஒருவர் உப்பு கேட்டார் என்றால் இல்லை என்று சொல்ல முடியது. எனவே உப்பை கீழே வைத்து அவர்களை எடுக்க சொல்லலாம். மேலும் உப்பை எடுப்பதற்கு முன், அரிசி, பருப்பு, வெல்லம் இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, அதற்குப் பதிலாக இந்த உப்பை கொடுக்கலாம். அதுவும் வேறு வழியில்லை என்றால் பண்டமாற்று முறையை கடைபிடிக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. எனினும் வெள்ளிக்கிழமையன்று முடிந்தவரை உப்பை கொடுக்காமல் இருப்பது நல்லது.

மேலும் வெள்ளிக்கிழமை பூஜை பொருட்களை சுத்தம் செய்யக்கூடாது. அதே போல் சமையலறையையும் சுத்தம் செய்யக்கூடாது. வீட்டில் ஒட்டடை அடிக்கக் கூடாது. வெள்ளிக்கிழமை இரவில் குப்பையை வெளியில் கொட்டக் கூடாது. வெள்ளிக்கிழமை வீட்டில் விளக்கேற்றிய பிறகு பால், தயிர், ஊசி, நூல் ஆகியவற்றை பிறருக்கு கொடுக்க கூடாது. பெண்கள் குங்குமம் வைக்காமல் இருக்கக் கூடாது.

தாலி கயிற்றை எந்தெந்த கிழமைகளில் மாற்ற வேண்டும்? சிறந்த நேரம் எது?

Follow Us:
Download App:
  • android
  • ios