தாலி கயிற்றை எந்தெந்த கிழமைகளில் மாற்ற வேண்டும்? சிறந்த நேரம் எது?
தாலி கயிற்றை ஆண்டுக்கு இருமுறையாவது மாற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஆடிப்பெருக்கு நாளில் தாலிக்கயிற்றை மாற்றலாம்.
தாலி என்பது இந்து மதத்தில் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. சிலர் திருமாங்கல்யத்தை தங்க சங்கில்யில் கோர்த்து அணியும் நிலையில், சிலர் மஞ்சள் கயிற்றிலேயே தாலி அணிகின்றனர். பொதுவாக தாலி கயிற்றை ஆண்டுக்கு இருமுறையாவது மாற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஆடிப்பெருக்கு நாளில் தாலிக் கயிற்றை மாற்றலாம். அந்த நாளை தவிர்த்து வேறு எந்த நாளில் மாற்ற வேண்டும் என்பதே பலருக்கும் இருக்கும் கேள்வி. இந்த கேள்விக்கு அனிதா குப்புசாமி தனது யூடியூப் சேனலில் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் “ தாலி கயிறு மாற்ற கட்டாயம் நாள், கிழமை பார்க்க வேண்டும். சுபமுகூர்த்த நாள், மேல்நோக்கு நாள், சித்த யோகம், அமிர்த் யோகம் என எல்லாமே கூடி வரும் நள்ள நாளில் தான் தாலி கயிறை மாற்ற வேண்டும். மேலும் கயிறு மங்குவதை தோன்றினால் மட்டுமே அதை மாற்ற வேண்டும். திங்கள், செவ்வாய், வியாழன் ஆகிய கிழமைகளில் மட்டுமே தாலி கயிற்றை மாற்ற வேண்டும்.
தாலி கயிறு மாற்றும் போது திசையும் முக்கியம். கிழக்கு நோக்கி அமர்ந்து தான் தாலிக் கயிற்றை மாற்ற வேண்டும். கணவர், சுமங்கலியாக இருக்கும் அம்மா, மாமியார் இப்படி வயதானவர் யாராவது மட்டுமே தாலி கயிறு மாற்றும் போது உடனிருக்க வேண்டும். அதே போல் தாலிக்கயிறு மாற்றும் போது பாதியிலேயே எழுந்திருக்க கூடாது. தேவையான பொருட்கள் அனைத்தையும் அருகில் வைத்து கொண்டு தான் மாற்ற வேண்டும்.
திருமாங்கல்யம், மஞ்சள், குங்குமம், பூ ஆகியவற்றை ஒரு தட்டில் எடுத்து அருகில் வைத்து கொள்ள வேண்டும். கர்ப்பமாக இருக்கும் தாலி கயிற்றை மாற்றக்கூடாது. பிரசவம் ஆன பிறகே மாற்ற வேண்டும். காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் குளித்து தாலி கயிறை மாற்றி, தாலிக்கு பூ, மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். பின்னர் பூஜை அறைக்கு சென்று வணங்கிவிட்டு அதன்பின்னரே மற்ற வேலைகளை செய்ய வேண்டும்.” என்று தெரிவித்தார்.
பிடித்தவர்களிடம் கூட தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த பயப்படும் ராசிக்கார்கள் இவர்கள் தான்..
- how to change tali rope in tamil jasvika media
- how to change thali
- how to change thali kairu
- how to change thali kayiru
- mangalya kayiru
- thaali
- thali
- thali kayaru
- thali kayiru
- thali kayiru matra nalla neram in tamil
- thali kayiru matrum matham
- thali kayiru matrum murai
- thali kayiru matrum murai in tamil
- thali kayiru matrum naal
- thali kayiru matrum neram
- thali kayiru matrum neram in tamil
- thali kayiru matruvathu epadi
- thali rope changing procedure tamil