கோயில் குளத்தில் ஏன் காசு போடப்படுகிறது? அறிவியல் காரணம் இதோ..
அந்த காலத்தில் கோயில் குளத்தில் காசு போடும் பழக்கம் இருந்தது. ஆனால் இதற்கு பின்னால் ஒரு அறிவியல் காரணமும் உள்ளது. அந்த காலத்தில் செம்பு நாணயங்களை குளத்தில் போட்டால், அந்த தண்ணீரை குடிக்கும் போது உடலுக்கு நன்மை கிடைக்கும் என்பதற்காக இதை செய்து வந்தனர்.
தமிழர்களின் ஒவ்வொரு செயலுக்கும் பின்னால் அறிவியல் காரணங்களும் ஒளிந்திருக்கிறது. ஆனால் அதை ஆன்மீக ரீதியில் நம்பிக்கை என்ற பெயரில் பின்பற்றி வந்தனர். மஞ்சள் தெளிப்பது முதல் பாயில் படுப்பது வரை பல செயல்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.. அந்த வகையில் கோயில் குளத்தில் காசு போடும் பழக்கமும் ஒன்று..
பழமையான கோயில்களுக்கு செல்லும் அங்குள்ள குளம் அல்லது கிணற்றில் காசு போடப்பட்டிருப்பதை நாம் பார்த்திருப்போம். சிலர் கோயில் குளங்களில் காசு போடுவதையும் பார்த்திருப்போம். இதை ஒரு சாஸ்திரமாக எடுத்துக் கொண்டு இதை பின்பற்றி வருகின்றனர். ஆனால் கோயில் குளம், கிணறுகளில் காசு போடுகின்றனர் தெரியுமா? இதற்கு பின்னணியில் உள்ள அறிவியல் காரணம் குறித்து தற்போது பார்க்கலாம்.
உடலில் எந்த இடத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்? தெரிஞ்சுக்க இதை படிங்க..
அந்த காலத்தில் நாணயங்கள் பெரும்பாலும் செம்பு உலாகத்தால் தான் தயாரிக்கப்பட்டது. நம் உடல் ஆரோக்கியமாக இருக்க சில உலோகங்கள் நம் உடலில் கலக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் செம்பு நம் உடலுக்கு ஆற்றலை தரக்கூடியது. எனவே செம்பு பாத்திரங்களில் தண்ணீர் பிடித்து குடிப்பது உள்ளிட்ட பலவற்றுக்கும் செம்பு பாத்திரங்களை பயன்படுத்தி வந்தனர்.
இப்போது போல அந்த காலத்தில் குழாய்கள் மூலம் குடிநீர் பயன்படுத்தப்படவில்லை. நீர் தேவைக்காக ஆறு, குளம், ஏரிகள் ஆகியவற்றையே மக்கள் அதிகம் சார்ந்திருந்தனர். எனவே ஆறு, குளங்களில் செம்பு நாணயங்களை போட்டனர். செம்பு கலந்த பின் அந்த தண்ணீரை அருந்தினால் உடலுக்கு நன்மை கிடைக்கும் என்பது கருதினர்.
இந்த பறவைகள் வீட்டுக்கு வந்தால் நல்ல சகுனமா? கெட்ட சகுனமா? அதிஷ்டத்தை அள்ளி கொடுக்குமா?
மேலும் அந்த காலத்தில் குளம் இல்லாத கோயிலை பார்க்க முடியாது. எனவே கோயில் குளங்கள் மற்றும் கிணற்றில் செப்பு காசுகளை போடும் வழக்கம் இருந்தது. ஆனால் இந்த காலக்கட்டத்தில் செப்பு நாணயங்களே புழக்கத்தில் இல்லை. எனவே அந்த கால முறையான காசு போடும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும் என்பதற்காக இரும்பு நாணயங்களை போட்டுக் கொண்டிருக்கிறோம். எனினும் செப்பு நாணயங்களை குளத்தில் போடுவதே நன்மை அளிக்கும். .