Asianet News TamilAsianet News Tamil

உடலில் எந்த இடத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்? தெரிஞ்சுக்க இதை படிங்க..

ஆண் பெண் இருபாலருக்கும் உடலில் உள்ள மச்சங்கள் குறித்த ஆன்மீக ரகசியங்களை இந்த பதிவில் காணலாம். கழுத்து, தோள், மார்பு, பாதம் என ஒவ்வொரு இடத்தில் உள்ள மச்சமும் வெவ்வேறு பலன்களை குறிக்கின்றன.

mole or macha palangal for men and women in tamil
Author
First Published Aug 19, 2024, 10:58 AM IST | Last Updated Aug 19, 2024, 10:58 AM IST

நம் உடலில் உள்ள மச்சங்களுக்கு ஆன்மீக ரீதியாக பல பலன்கள் இருக்கின்றன. அந்த வகையில் ஆண் பெண் இருவருக்கும் பொதுவாக இருக்கும் மச்ச பலன்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். ஆண்கள் மற்றும் பெண்கலின் கழுத்தின் பின் பகுதியில் மச்சம் இருப்பது நீண்ட ஆயுளை குறிக்கும். இவர்கள் மற்றவர்களை சந்தோஷப்படுத்துவதற்காக வேடிக்கையாக பேசுவார்கள்.

அதே போல் தலை முதல் வாய் வரை உள்ள எந்த பகுதியில் மச்சம் இருந்தால் அவர்கள் ஆசை இல்லாதவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் கோபமும் பதட்டமும் அதிகம் இருக்கும். வாழ்க்கையின் பிற்பகுதியில் வசதி வாய்ப்புகள் பெருகும். ஆண்களுக்கு வலது பக்க தோளில் மச்சம் இருந்தாலும், பெண்களுக்கு இடது பக்க தோளில் மச்சம் இருந்தாலும் அவர்களுக்கு தெய்வீக விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். இவர்களுக்கு எழுத்துத்துறையில் நல்ல எதிர்காலம் இருக்கும். 

ஆண் மற்றும் பெண்களுக்கு மார்பில் அல்லது இதயம் இருக்கும் பகுதிக்கு மேல் அல்லது கீழ் மச்சம் இருந்தால் மச்சத்தின் அளவை பொறுத்து அதிர்ஷ்ட வாய்ப்புகள் அமையும். பண விஷயத்தில் மிகவும் உஷாராக இருக்கும் இவர்கள் சற்று சுயநலம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் கொஞ்சம் சுயநலவாதிகளாகவும் இருப்பார்கள். 

காலையில் கண் விழித்ததும் எதை பார்த்தால் செல்வம் பெருகும் ? ஆனா இத பார்த்தா இருக்கும் அதிர்ஷ்டமும் போய்டும்!!

ஆண் மற்றும் பெண்களின் வலது பாதம், இடது பாதம் உள்ளங்கால் போன்ற இடங்களில் எங்கு மச்சம் இருந்தாலும் அவர்கள் காலப்போக்கில் பருமனாகவும் உயரமாகவும் இருக்கும் உடலமைப்பை பெறுவார்கள். அனைவரிடமும் தங்கள் கருத்துகளை சொல்ல மாட்டார்கள். செல்வம், செல்வாக்கு இருந்தாலும் அது தகுந்த நேரத்தில் இவர்களுக்கு உதவாது. 

ஆண், பெண் இருவருக்கும் இடுப்பிற்கு கீழ் வலது அல்லது இடது பக்கத்தில் மச்சம் இருந்தால் இவர்கள் மிகவும் உறுதியாக பேசுவார்கள். உயர் பதவி இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். ஆண் மற்றும் பெண்ணின் வலது தொடை அல்லது இடது தொடையில் அல்லது முழங்காலுக்கு அருகே மச்சம் இருந்தால் கல்வி, செல்வம் என அனைத்தும் இவர்களுக்கு கிடைக்கும். வாழ்க்கையின் பிற்பகுதியில் அதிக சொத்துக்கள் சேரும். 

இந்த பறவைகள் வீட்டுக்கு வந்தால் நல்ல சகுனமா? கெட்ட சகுனமா? அதிஷ்டத்தை அள்ளி கொடுக்குமா?

வலது முழங்கால் அல்லது இடது முழங்காலை ஒட்டி மச்சம் இருந்தால் அவர்கள் தனது விருப்பப்படி தனது காரியத்தை செய்வார்கள். வாழ்வின் பிற்பகுதியில் சகல செல்வங்களையும் பெறுவார்கள். ஆண் பெண் இருவரின் வயிற்றுப்பகுதிக்கு கீழ் மச்சம் இருந்தால் இவர்களுக்கு நீதி நேர்மை ஆகிய பண்புகள் நிறைந்திருக்கும். ஆனால் வாழ்க்கையில் அதிகமாக போராட வேண்டியிருக்கும். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios