Asianet News TamilAsianet News Tamil

கவலைகள் தீர்க்கும் கந்த சஷ்டி கவசம் கதை தெரியுமா?

காலை ஆறு மணி ஆனதும் அனைவரின் வீடுகளிலும் கணீரென்று கேட்கலாம் கந்த சஷ்டி கவசம். முருகன்  கோவில்களிலும்  கந்த சஷ்டி கவசம்  பாடலை கேட்கலாம்.  முருகனை துதித்து பாடும் பல பாடல்கள் இருந்தாலும், முருகனை வணங்க வேண்டும் என்றால் கந்த சஷ்டி கவசம் தான் என்று சொல்லலாம். ஏனெனில் இது  தனது தனித்தன்மையால் முதன்மையாய் நிற்கிறது. இப்படி அனைவரின் உள்ளத்திலும், உடலிலும் அதிர்வு தரும் ஆற்றல் மிகுந்த  இந்த  பாடலை  பாடியவர் தேவராய சுவாமிகள் என்னும் அருளாளர். இந்த கந்த சஷ்டி கவசத்தை அவர் பாடியதன் பின்னணியை தெரிந்து கொள்வோம்.
 

Do you know the story of Kanda Shashti Kavasam?
Author
First Published Oct 18, 2022, 6:07 PM IST

செல்வத்திற்கு குறைவில்லாத குடும்பத்தில் பிறந்தவர் தான் தேவராயர். பெங்களூருவில் வணிகம் செய்த இவர், தமிழ் இலக்கியங்களும் பயின்று வந்தார். முருகனின் தீவிர பக்தர். ஒருமுறை தேவராயர் பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலுக்கு சென்று, மலையை சுற்றி கிரிவலம் வந்தார்.  அப்போது அங்கிருக்கும் மண்டபங்களில் உடல் மற்றும் மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள், வறுமையில் வாடுபவர்கள் வந்து அழுவதை கண்டு மனம் வருந்தினார். இவர்கள் அனைவரும் நலம்பெற வேண்டும் என்று முருகனிடம் வேண்டி, அன்றிரவு அங்கேயே தூங்கினார். 

அப்போது அவரின் கனவில் பழநியாண்டவரே வந்தார். கனவில் வந்த முருகன், "உனது எண்ணம் ஈடேற அருளுகிறோம். அதற்கான வழி உன்னிடத்திலே தான் உள்ளது. அனைவரும் இன்புற்று வாழ்வதற்கேற்ற மந்திரம் ஒன்று செந்தமிழில் பாடு!" என்று ஆசி வழங்கினார்.  உடனே கனவில் இருந்து எழுந்த தேவராயர், ‘‘சண்முகா போற்றி! சரவணபவனே போற்றி!’’ என மகிழ்ந்தார். உடனே முருகப்பெருமானின் அருளை வியந்து போற்றி பாமாலை சூட்டினார். அதுதான் 238 அடிகளைக் கொண்ட கந்தர் சஷ்டி கவசம் என்னும் புகழ்பெற்ற பாடல்.

தேவராய சுவாமிகள் ஆறு பதிகளுக்கும் தனித்தனியே ஆறு கவசம் பாடியுள்ளார் என அறிய முடிகிறது. அதாவது திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, திருவேரகம், குன்று தோறாடல், பழமுதிர்ச்சோலை ஆகியவை முறையே தனித்தனியாக பாடியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. தற்போது அனைவருக்கும் தெரிந்த கவசம் திருச்செந்தூரில் பாடப்பட்டது என்றும் கூறப்படுகிறது. மேலும் ஒருநாள் முப்பத்தாறு முறை இக்கவசத்தை, நமது எண்ணத்தில் எந்த தீங்கும் இல்லாமல் வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் பாடி வந்தால் எல்லா நோயும் நீங்குவதோடு, நவக்கிரகங்கள் மனம் மகிழ்ந்து நன்மைகள் செய்வர் என்றும் நாம் இன்பமுடன் வாழலாம் என்றும் கூறியுள்ளார் தேவராயர். 

ஆனைமுகனுக்கு அருகம்புல் தான் விசேஷம் ஏன் தெரியுமா?

முருகப்பெருமானுக்கு பெரும்பாலும் அனைத்தும் ஆறில் தான் இருக்கும். அதாவது அவருக்கு 6 முகங்கள், 6 படை வீடுகள், 6 கார்த்திகைப் பெண்கள் ( முருகனை வளர்த்தவர்கள்) முருகப்பெருமானின் திருமந்திரம் சரவணபவ 6 எழுத்து. அதேபோன்று மனிதனுக்கு ஜாதகத்தின் ஆறாம் இடம் பொதுவாக விரோதம், கடன், ரோகம், சத்ரு ஆகியவற்றை குறிக்கும். இந்த தோஷங்களை போக்கும் வல்லமை கொண்டவர் முருகப்பெருமான் தான். அதனால், நாம் வழக்கமாக பாடும் திருச்செந்தூர் திருத்தலத்தின் சஷ்டி கவசத்தோடு, மீதமிருக்கும் 5 அறுபடை வீடுகளுக்கும் சேர்த்து சஷ்டி கவசங்களை வழிபாடு செய்வது நல்லது.

அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் என்றால் என்ன தெரியுமா?

"ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்
உய்யொளி சௌவும் உயிரையுங் கிலியும்
கிலியும் சௌவும் கிளரொளியையும்
நிலைபெற் றென்முன் நித்தமு மொளிரும்
சண்முகன் ரீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாஞ்சிவ குகன்தினம் வருக"

என்ற வரிகள் தான் கந்த சஷ்டியில் வரும் அதி சூட்சும முருக மந்திரம் என்று கூறப்படுகிறது. நமக்கு முழு மந்திரமும் தெரியவில்லை என்றாலும் கூட, இதை மட்டும் தெரிந்து வைத்து கொள்வது மிக நல்லது.

Follow Us:
Download App:
  • android
  • ios