அம்மி மிதித்து, அருந்ததி பார்ப்பதன் ரகசியம் தெரியுமா?
சடங்குகளும் சம்பிரதாயங்களும் கடைப்பிடிப்பதில் முக்கியமான நிகழ்வு திருமணம். ஏனெனில் திருமணம் என்பது சிறப்பான இல்லற வாழ்க்கையின் தொடக்கம் என்று சொல்லலாம். ஓர் ஆணும், பெண்ணும் இணையும் திருமண பந்தம் என்பது மிக முக்கியமானது.
சடங்குகளும் சம்பிரதாயங்களும் கடைப்பிடிப்பதில் முக்கியமான நிகழ்வு திருமணம். ஏனெனில் திருமணம் என்பது சிறப்பான இல்லற வாழ்க்கையின் தொடக்கம் என்று சொல்லலாம். ஓர் ஆணும், பெண்ணும் இணையும் திருமண பந்தம் என்பது மிக முக்கியமானது.
இந்தத் திருமண வாழ்க்கை பயனுற அமைய வேண்டுமானால், திருமணம் என்னும் பந்தத்தில் இணையும் கணவன், மனைவி இருவர் மனதிலும் அன்பும் அறமும் பொருந்தி இருக்க வேண்டும். மேலும் சிறப்பு மிக்க கணவன், மனைவி என்னும் பந்தத்தை ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் ஏற்படுத்தும் திருமணத்தில் உள்ள சடங்குகளையும் அவற்றின் அர்த்தத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
அதனடிப்படையில் நமது கலாச்சாரத்தில் திருமண நாள் அன்று முக்கிய சடங்காய் இருப்பது அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது தான். பலரும் இந்த சடங்கை கிண்டல் செய்து வருவதுண்டு. ஆனால் இந்த சடங்கிற்கு பின் ஒரு முக்கியமான காரணம் உள்ளது. அடி மேல் அடி அடித்தால் தான் அம்மியும் நகரும் என்ற பழமொழி உள்ளது. ஏனென்றால் அத்தகைய உறுதியுடையது அம்மி.
திருமண நாள் அன்று மணமகன் மணமகளின் கால் கட்டை விரலை பிடித்து அம்மியில் மீது வைப்பதற்கு காரணம், மணமகள் எப்போதும் அம்மியை போல் உறுதியாக மனம் கலங்காமல் இருக்க வேண்டும் என்பதை உணர்த்த தான். அதோடு கூட்டு குடும்பம் என்றால் மணியார், நாத்தனார் என்று பல உறவுகள் இருப்பார்கள். சில நேரங்களில் அவர்கள் மூலம் இன்பங்களும் துன்பங்களும் வரும். அவை இரண்டையும் சமாளித்து குடும்பத்தின் நலனுக்காக உறுதியாக வாழ்ந்திட வேண்டும் என்று மணமகன் மனோரதியாக மணமகளுக்கு தைரியம் சொல்லும் சடங்கு தான் அம்மி மிதிக்கும் சடங்கு.
புராணத்தில் அருந்ததி என்ற பெயருக்கு கணவனின் எண்ணம் அறிந்து கற்பு நெறியுடன் வாழ்பவள் என்று கூறப்பட்டுள்ளது. வஸ்து என்றால் பஞ்சபூதங்கள் என்றும், வசிஷ்தா என்றால் பஞ்சபூதங்களில் ஐக்கியமானவன் என்றும் பொருள்.
காரைக்குடியில் ஒரு தென்திருப்பதி சென்று வாருங்கள்.. திருப்பம் கிடைக்கும்
திருமண பந்தத்தில் இணையும் மணப்பெண்ணானவள் தன்னையும் தன் உடலையும் காமக்கண்ணுடன் யாரேனும் பார்த்தால், தனது உடலை அக்னிக்குள் சமர்ப்பித்து தன்னைப் பரிசுத்தப்படுத்திக் கொள்வதுடன், தன்னைத் திருமணம் செய்து கொள்பவளின் பாவங்களையும் அதே அக்னியில் சாட்சியாக நீக்கி, பரிசுத்தப்படுத்தி, தன் ஆற்றல் எனும் ஆக்ஞை சக்கரத்தை கணவனுக்கு முழுமையாகக் கொடுத்து புருவ மத்தியில் திலகமாக ஏற்றுக்கொள்கிறாள்; கணவனிடம் சரணாகதி அடைகிறாள்.
பைத்தியத்திற்கு வைத்தியம் பார்த்த காலகண்டன்
மேலும், மணப் பெண்ணானவள் தன் கழுத்தில் மங்கல நாண் சூடிய கணவனுக்கு அருந்ததி நட்சத்திரத்தைக் காட்டி அருந்ததியைப் போல் ஏழு ஜன்மங்களிலும் உமக்கு மட்டும் மனைவியாக இருப்பேன் என்று சத்யப்பிரமாணம் செய்கின்றாள். அக்னியில் பிறந்த பெண், அக்னியாலேயே பரிசுத்தப்படுத்திக் கொண்டு ஆணையும் பரிசுத்தப்படுத்தி திருமணம் எனும் தெய்வீக பந்தத்துக்குள் இணைந்து அர்த்தநாரீஸ்வரியாகத் திகழ்கின்றாள் என்பதுதான் அதன் அர்த்தமாம்.