திருஷ்டி சுற்றுவதன் காரணம் தெரியுமா?

”கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது” என்ற பழமொழி உள்ளது. ஏனென்றால் மனிதனின் கண்பார்வைக்குத் தனித்துவமான மகத்துவம் உண்டு. கண்களுக்கு தான் மனத்தின் உணா்ச்சிகளை வெளிப்படுத்துவதில் அதிகமான பங்கு உண்டு. கண்பார்வை மூலமாகவே பார்க்கப்படும் பிற மனிதனின்  உடல் நலத்தையோ, மனநிலையையோ அல்லது வாழ்க்கை நிலையை மேன்மையாக்கவும் முடியும் அல்லது சீா் குலைக்கவும் முடியும்.
 

Do you know the reason behind the circling of Trishti?

கண் பார்வை மூலமாகப் பிறருக்குப் பாதிப்பு ஏற்படுவதை கண்திருஷ்டி என்று கூறுவா். அதனால் தான் புதுமண தம்பதிகளுக்கும் , குழந்தைகளுக்கும், வெளியூரில் இருந்து திரும்பி வருபவர்களுக்கும் திருஷ்டி சுற்றுவது வழக்கம். இதற்கு காரணம் அவர்கள் மீது ஏதாவது கண் திருஷ்டி இருந்தால் அது விலக வேண்டும் என்பதே. திருஷ்டி என்பது தமிழ் சொல் இல்லை அது சம்ஸ்கிருத சொல். தமிழில் கண். திருஷ்டி கழித்தலை தமிழர்கள் 'கண்ணேறு கழித்தல்' என்று தான் கூறுவார்கள்.

பிறக்கும் குழந்தை எல்லாம் அழகுதான். ப்பா..!! எத்தனை அழகு.. அழகோ அழகுன்னு அனைவரும் கொஞ்சும் போது ஏற்படும் திருஷ்டிக்கு பரிகாரம் தான் 'கருப்பு திருஷ்டி' பொட்டு. இது எல்லோராலும் செய்யக்கூடிய ஒன்று. நெற்றியிலும், கன்னத்திலும் இடப்படும் மைப்பொட்டு குழந்தையின் திருஷ்டியை நீக்கும். கோயில்களில் தரும் ஹோம ரட்சையை வைத்தால் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும்.

இதையடுத்து இளைஞர்களுக்கு வரும் திருஷ்டி. ஒருகைப்பிடி உப்பை எடுத்து கையை நல்லா மூடி கிட்டு இளைஞனையோ / வாலிப பெண்ணையோ கிழக்கு நோக்கி நிறுத்தி இடமிருந்து வலமா மூணு தடவையும், வலமிருந்து இடமா மூணு தடவையும் சுத்தி அப்படியே சுத்தி அந்த உப்பை தண்ணியில போட்டுடுங்க. நீரில் உப்பு கரைவது போன்று  திருஷ்டி எல்லாம் கரைஞ்சி போய்விடும்.

செவ்வாய் தோஷ நிவர்த்திக்கு பௌமாஸ்வினி புண்யகாலம்!

புதிய சட்டி ஒன்று, ஊமத்தங்காய், படிகாரம் தெருமண் , இவையனைத்தையும் சேர்த்து கொண்டு பெரியவர்களை தெருவாசலில் கிழக்கு பக்கமாக நிறுத்தி மண்சட்டிக்குள் இவை மூன்றையும் போட்டு மண்சட்டியை தலைக்கு இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் மூன்று தடவை சுற்றி தலை முதல் பாதம் வரை இறக்கி அப்படியே எடுத்துச் சென்று முச்சந்திகள் கூடும் இடத்தில் போட்டு உடையுங்கள். அதுமட்டுமின்றி கையோடு துடைப்பம் எடுத்துச் சென்று ஓரமாக பெருக்கித் தள்ளுங்கள். இதனால் மற்ற யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் போகும். பின்னர் வீடு திரும்பி கை கால் கழுவி தலையில் சிறிது தண்ணீர் தெளித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்திட வேண்டும். மாதம் ஒருமுறை மூன்று கண் கொட்டாங்கச்சி எடுத்து அதை அடுப்பில் பற்றவைத்து ஒரு தட்டில் வைத்து சுற்றி தெருவில் ஓரமாக போடலாம்.

அவ்வையும் முருகனும் நமக்கு கற்றுத்தந்தது இதுதான்!

இன்னும் ஒரு சில வீடுகளில் கடுகுமிளகாய், உப்பு சிறிது தெருமண், தலைமுடி இவையனைத்தையும் கையில் எடுத்துக் கொண்டு குழந்தையை உட்காரவைத்து ஊரு கண்ணு, உறவு கண்ணு, நாய் கண்ணு, நரிக் கண்ணு, நோய்கண்ணு, நொள்ள கண்ணு கண்டக் கண்ணு, கள்ளக் கண்ணு, அந்த கண்ணு, இந்த கண்ணு எல்லாம் கண் ணும் கண்டபடி தொலையட்டும் கடுகு போல வெடிக்கட்டும் என்று இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் சுற்றி அடுப்பில் போடுவார்கள்.

இப்படி பல விதமாக கண் திருஷ்டியை கழித்தாலும், நரசிம்மர், காளி மற்றும் துர்கை போன்ற தெய்வங்களை வழிபடும் இடத்தில எந்த ஒரு கண் திருஷ்டியோ அல்லது தீய சக்தியோ நெருங்க முடியாது. ஆகையால் அது போன்ற இடங்களில் திருஷ்டி சுற்ற வேண்டிய அவசியம் இல்லை.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios