மாடிப்படிகளுக்கு கீழே அறை வைக்கலாமா? எத்தனை படிகள் இருக்க வேண்டும்? வாஸ்து சாஸ்திரத்தின் முழுவிவரம் இதோ!

 

வீடுகளில் வாஸ்து சாஸ்திரம் மாறியிருந்தாலும் பிரச்சனைகள் வரலாம் என நிபுணர்கள் சொல்கின்றனர். வாஸ்து விஷயங்களில் என்ன மாதிரியான விதிகளை பின்பற்ற வேண்டும் என இங்கு காணலாம். 

direction of stairs as per vastu

வாஸ்து சாஸ்திரங்களில் பலருக்கு ஆர்வம் இருப்பதில்லை. ஆனால் நாம் வசிக்கும் வீடு என்பது நமக்கு எல்லா நலன்களையும் அடைய வழிகாட்டும் பெட்டகமும் கூட. வாஸ்து கொஞ்சம் மாறியிருந்தாலும் சில பிரச்சனைகள் ஏற்படலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உதாரணமாக மாடியோடு இருக்கும் வீடுகளில் படிகளை அமைக்கும்போது சிலர் வாஸ்து கவனம் காட்டுவதில்லை. வீட்டின் அழகை கூட்ட விதவிதமான வடிவமைப்புகளை மட்டும் பின்பற்றுகிறார்கள். இதில் தவறு கிடையாது. ஆனால் வாஸ்து குறிப்புகளை பின்பற்றி மாடுப்படிகளை கட்டினால் பல பயன்கள் கிடைக்கும். அதை இங்கு காணலாம்.

மாடிப்படி திசை

மாடிப்படிகள் வீட்டுக்குள்ளும், வெளியிலும் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் படிகளை அமைக்கின்றனர். ஆனால் எந்த திசையில் அமைத்தால் நன்மை கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வது நல்லது. மாடிப்படிகள் வீட்டிற்குள் இருந்தால் தென்மேற்கு பகுதியில் வைக்கலாம். தெற்கு, மேற்கு திசையில் உள்ள பகுதிகள் இரண்டாம்பட்சமான தேர்வுகளாக வைத்து கொள்ளலாம். ஆனால் படிக்கட்டு வடக்கிலிருந்து ஆரம்பித்து தெற்கு நோக்கி செல்வதை போல அமைக்க வேண்டும். 

மாடிப்படி தத்துவம் 

மாடிப்படிகளை எப்போதும் முன்னேற்றம் அடைவதோடு ஒப்பிடலாம். அதாவது முன்னேற நினைப்பவர்களுக்கு கீழிருந்து மேலே செல்லும் மாடிப்படிக்கட்டுகள் தான் நினைவுக்கு வரும். அதனால் திசைகளை அதை கணக்கிட்டு தான் முடிவு செய்வார்கள் நிபுணர்கள். மாடிப்படிகள் மேல் நோக்கி ஏறுவது, கீழ் நோக்கி இறங்குவது ஆகிய தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டது. அதனால் முதல் படியில் கால் வைப்பதை பொறுத்தவரை, ஏறுபவர் முகம் கீழ்த்திசைகளான கிழக்கு, வடக்கு நோக்கி இருக்க வேண்டும். வீட்டின் உட்புறமோ அல்லது வெளிப்புறமோ குறிப்பிட்ட இடத்தை தேர்ந்தெடுத்து மாடிப்படிகளை அமைத்து கொள்வது நல்லது. 

  • வீட்டின் உட்புறம் - தெற்கு அல்லது மேற்கு பகுதியின் மத்தியில் மாடிப்படிகளை வைப்பது நல்லது. 
  • வீட்டின் வெளிப்புறம் - தென்கிழக்கு, வடமேற்கு ஆகிய பகுதிகளில் திறந்தவெளி படிகளாக வைத்து கொண்டால் சிறப்பு. 
  • மாடிப்படிகளை இடதுபுறமிருந்து வலதுபுறமாக வைப்பது ஏற்றது. குறிப்பாக மாடிப்படிக்கட்டின் முதல் படியை வட்ட வடிவில் வைக்கவே கூடாது.

vastu tips for stairs

மாடிப்படியை கணக்கு பண்ணனும்! 

உங்களுடைய மாடிப்படிகளின் எண்ணிக்கையை, எண் 3 ஆல் வகுத்து கிடைக்கும் விடையின் கடைசி எண் 2 ஆக இருந்தால் வாஸ்துபடி நல்லது. 

செய்யக்கூடாதவை! 

  • மாடிப்படிக்குக் கீழ் சிலர் அறை, குடோன், கழிவறையை ஏற்படுத்தி கொள்கிறார்கள். அதை செய்யவே கூடாது. அது மட்டுமில்லாமல், வீட்டின் மத்தியில், குறுக்காக மாடிப்படி கட்டுவது ஏற்றது அல்ல. 
  • மாடிப்படிகளை வடகிழக்கு நோக்கி அமைத்தால் வீட்டில் செல்வத்திற்கு பற்றாக்குறை வரும். வீட்டில் உள்ளவர்களுக்கு உடல்நலக் குறைவு கூட ஏற்படும். 

இதையும் படிங்க: வெறும் 2 நிமிடங்களில் சர்க்கரை வியாதிக்கு அருமருந்தாகும் கொய்யா இலை... எப்படி பயன்படுத்தனும் தெரியுமா?

இதையும் படிங்க: தண்ணீரை நின்று கொண்டு குடித்தால் ஆபத்தா? அமர்ந்த நிலையில் நீர் அருந்த அறிவுறுத்தும் நிபுணர்கள், ஏன் தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios