கோவிந்தா முழக்கம் விண்ணை பிளக்க கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்ற மதுரை மக்கள்
சித்திரைத் திருவிழாவின் 12ம் நாளான இன்று அழகர்கோவிலில் இருந்து புறப்பட்ட கள்ளழகரை மூன்று மாவடி அருகே மதுரை மக்கள் ஆயிரக்கணக்கில் கூடி எதிர்கொண்டு வரவேற்றனர். அப்போது விண்ணதிர 'கோவிந்தா' கோஷம் எழுப்பினர்.
உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா மதுரை மாநகரில் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாலிருஞ்சோலை அழகர்கோவிலில் இருந்து நேற்று மாலை தங்கப்பல்லக்கில் புறப்பட்ட கள்ளழகர், வழியில் பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, சுந்தரராஜன்பட்டி, காதக்கிணறு, சுந்தரராஜன்பட்டி வழியாக இன்று காலை 7.30 மணியளவில் மூன்று மாவடியை வந்தடைந்தார்.
அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களும், பக்தர்களும் கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்றனர். அப்போது 'கோவிந்தா' எனும் முழக்கம் எழுப்பினர். கோ.புதூரிலுள்ள மாரியம்மன் கோவில், ரிசர்வ்லைன் மாரியம்மன் கோவில், அவுட்போஸ்ட் மாரியம்மன் கோவில், அம்பலகாரர் மண்டபம் ஆகிய இடங்களில் எழுந்தருளி இன்று இரவு 9 மணியளவில் தல்லாகுளம் பெருமாள் கோவிலை வந்தடைகிறார்.
விஐபிகளுக்காக உடைக்கப்பட்ட 137 ஆண்டு பாரம்பரியமிக்க ஏவி மேம்பாலச்சுவர் - மக்கள் கொந்தளிப்பு
நாளை அதிகாலை 2.30 மணியளவில் தல்லாகுளம் கருப்பணசாமி திருக்கோவில் அருகேயுள்ள ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருள்கிறார். பிறகு அதிகாலை 5.45 மணியிலிருந்து 6.12 மணிக்குள் வைகையாற்றில் எழுந்தருள்கிறார். அழகர்கோவிலில் இருந்து மதுரை வண்டியூர் வரை வழிநெடுகிலும் சுமார் 480 மண்டகப்படிகளில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
விருதுநகரில் ரூ.4.70 லட்சம் மதிப்பிலான 3,379 மதுபாட்டில்கள் அழிப்பு
மூன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 1500 காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.