Palani Murugan Temple: பழனி முருகன் கோவிலில் அலைமோதும் கூட்டம்! 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்.!
அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா வருகின்ற 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி முக்கிய விழா 25ம் தேதி தைப்பூச திருவிழா நடைபெறுகிறது.
பழனியில் தொடர் விடுமுறை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், பால் காவடி எடுத்தும் 5 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா வருகின்ற 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி முக்கிய விழா 25ம் தேதி தைப்பூச திருவிழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து தற்போதிலிருந்தே முருக பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இதையும் படிங்க;- திருப்பதி ஏழுமலையான் கோவில் பக்தர்களுக்கு குட் நியூஸ்.. தரிசன டிக்கெட்டுகள் முதல் சேவைகள் வரை.!!
பொங்கல் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலப் பாதையில் பால் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும் கரும்புத் தொட்டில்கள் எடுத்தும் பக்தர்கள் பல்வேறு விதமான நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். மின் இழுவை ரயில், ரோப் கார் நிலையங்களில் சுமார் 3 மணி நேரம் வரையிலும், இலவச தரிசனம், சிறப்பு கட்டண வழி தரிசனம் மூன்று மணி நேரம் வரையிலும் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க;- தை மாத ராசி பலன் 2024 : எண்ணங்கள் நிறைவேறும்.. திருமணம் கைகூடும்..அதிர்ஷ்ட யோகம் யாருக்கு...?
கிரிவல பாதையில் மணப்பாறையை சேர்ந்த பக்தர்கள் அலகு குத்தும் காட்சிகள் மெய்சிலிர்க்கும் வகையில் இருந்தது. தொடர் விடுமுறையால் பழனி கோவிலில் 5 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.