கணபதி ஹோமம் எதற்காக தெரியுமா?
ஹோமம் செய்தால் அதற்கான பலனை கொடுத்தே தீருவார்கள் தேவர்கள். அதில் முதன்மையானது தான் கணபதி ஹோமம்.. தேவர்கள் முதல் மகாதேவனான ஈசன் வரை அவர் மகனே ஆனாலும் வழிபட்டுவிட்டுத்தான் காரியத்தை தொடங்குகின்றனர்.
கடலில் இருக்கும் நீர் எப்படி ஆவியாகி மீண்டும் மழையாகப்பொழிந்து வருகிறதோ அந்த சுழற்சியைப் போன்றது தான் ஹோமங்கள். இப்போது எப்படி பல முகவரிகளுக்கு எழுதிய கடிதங்களை, ஒரே தபால் பெட்டியில் போடுகிறோம்.அதுபோன்று தான் பல தேவதைகளுக்கு பலவிதமான திரவியங்களை மந்திரப் பூர்வமாக அக்னியில் விடுவதை ஹோமம் என்கிறோம். இப்படி நாம் செய்கிற ஹோமங்களின் வாயிலாய் திருப்தி அடைந்து நமக்கு அனுக்கிரகத்தை அள்ளித் தருகின்றனர், தேவர்கள்.
ஹோமம் செய்தால் அதற்கான பலனை கொடுத்தே தீருவார்கள் தேவர்கள். அதில் முதன்மையானது தான் கணபதி ஹோமம். ஒருமுறை திரிபுர சம்ஹாரம் செய்ய தயாராக இருந்த ஈசனின் தேர் அச்சாணியை விநாயகர் உடைத்த போது, தேரே ஸ்தம்பித்து நின்றது. அப்போது தான் ஈசன் விநாயகரை வணங்காது புறப்பட்டுவிட்டதை உணர்கிறார். பின்னர் எவ்வளவு பெரிய தவறு இது என விநாயகரின் எதிரே தலைகுனிந்து மண்டியிட்டார். இதுதான் ஈசன் தன்னைத்தானே தாழ்த்திக்கொண்டு உலகிற்குச் சொன்ன பாடம். அன்றையிலிருந்து தேவர்கள் முதல் மகாதேவனான ஈசன் வரை அவர் மகனே ஆனாலும் வழிபட்டுவிட்டுத்தான் காரியத்தை தொடங்குகின்றனர்.
எல்லா சுப நிகழ்ச்சிகளுக்கும் செய்யப்படுவது தான் கணபதி ஹோமம். முதல் கோணல் முற்றிலும் கோணலாக மாறாமல் நேர்ப்பாதையில் சென்றிடவும், பாதையில் இருக்கும் தடைகளை நீக்கவும் செய்யப்படுவதே கணபதி ஹோமமாகும். கனகரிஷி தான் மகாகணபதி ஹோம மந்திரங்களை உருவாக்கியவர். இதனை ஹோமமாகச் செய்தவர் காஷ்யப மகரிஷி. அருகம்புல்லின் மகத்துவத்தையும் அறியச் செய்தவர்.
அலை பாயும் மனம் அமைதியடைய என்ன அபிஷேகம் செய்யணும் தெரியுமா?
இந்த ஹோமத்தில் முதலில் உள்ள அனுக்ஞை என்பது பெரியோர்களின் அனுமதி ஆசிகளைப் பெறுவது. இதன் பின்னர் வைதிகர்களின் வழிகாட்டுதலின்படி மந்திரங்களைச் சொல்லி ஒவ்வொன்றாக செய்ய வேண்டும். அதிலும் ஹோமத்தைச் செய்பவர்கள் தங்கள் பெயர், மனைவி, பிள்ளைகள், பேரக் குழந்தைகள் என அனைவரின் பெயரையும் பிறந்த நட்சத்திரங்களோடு கூறி ஹோமத்தைச் செய்யும் தகுதியை வழங்க அனுமதி பெற வேண்டும். மனைவியோடு அமர்ந்து மந்திரங்களை கூறி மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து விக்னேஸ்வரரை வணங்கிட வேண்டும்.
அடுத்து சங்கல்பம் அதாவது உறுதிமொழி. இந்த இடத்தில் எங்களுக்காக நடத்தப்படும் இந்த ஹோமத்தின் சகல காரியங்களையும் செய்ய அந்தணர்களை வணங்க வேண்டும். பின்னர் புண்யாகவாஜனம். சுத்தமான தரையில் பசுஞ்சாணத்தால் மெழுகி நெல்லைப் பரப்பி அதன் மீது வாழை இலை வைத்து அதில் சமமாக அரிசியைப் பரப்பி அதன் மையத்தில் தாமரைப்பூவை வரைந்து, பூவின் நுனியில் தர்ப்பைகளை வைத்து பூரண கும்பத்தை நீர் நிரப்பி அதில் ஏலக்காய், பச்சைக் கற்பூரம், குங்குமப்பூவை சேர்க்க வேண்டும். அதன் மீது மஞ்சள் தடவிய தேங்காய், மாவிலைக் கொத்து வைக்க வேண்டும். இதை வைக்கும்போதே அதற்கென்ற மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.
அலை பாயும் மனம் அமைதியடைய என்ன அபிஷேகம் செய்யணும் தெரியுமா?
இதையெல்லாம் முடித்த பிறகு ஹோம குண்டம் அமைத்து எல்லா தேவதைகளையும் வரவழைத்து உயிரூட்ட கூடிய ஆஹானம் செய்ய வேண்டும். பின் மகாகணபதி ஹோமம் ஆரம்பிக்கிறது. அவருக்கான மந்திரங்களைச் சொல்லி பதினாறு வகையான உபசாரங்களை செய்திட வேண்டும்.
மகாகணபதி ஹோமம் மிகவும் சூட்சுமங்கள் நிறைந்தது. மந்திரங்களோடு சேர்த்து செய்யப்படும் அக்னியின் அசைவுகள் யானை அசைவது போலிருக்கும். உங்களுக்குள் இருக்கும் மூலாதார சக்தியைத் தூண்டுவதுதான் இதன் மையம்.
Mantras : சக்தி மிகுந்தவையா மந்திரங்கள்?
கணபதி ஹோமம் என்பதே வாழ்க்கையின் இக பரலோகத்தின் வெற்றியைக் கொண்டுவரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இந்த ஹோமத்தை வெள்ளிக்கிழமைகளில் சுக்ல பட்ச சதுர்த்தி, ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் செய்தால் விசேஷம் என்று கூறுகிறார்கள். பிடித்து வைத்த பிள்ளையார் என்பார்கள். இத்தனை எளிமையான தெய்வத்தை சிக்கெனப் பிடித்து விட்டால் சீரும் சிறப்போடும் வாழலாம்.