அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா.. பிரதிஷ்டை செய்யப்படும் நேரம் என்ன? பூஜை எப்போது தொடங்கும்? முழு விவரம்!
Ayodhya Ramar Temple : அயோத்தியில் ராமர் கோவில் விரைவில் திறக்கப்படவுள்ள நிலையில், பிரதிஷ்டை செய்யப்படும் நேரம் மற்றும் பிற முக்கிய தகவல்கள் இப்பொது வெளியாகியுள்ளது.
அயோத்தியில் ராமபிரானின் திரு உருவம் பிரதிஷ்டை செய்யப்படும் நேரமானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெறும் 84 வினாடிகளில் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பண்டிட் கணேஷ்வர் சாஸ்திரி டிராவிட் மற்றும் பண்டிட் விஸ்வேஷ்வர் சாஸ்திரிகளின் கூற்றுப்படி, 2024ம் ஆண்டு ஜனவரி 22 அன்று மதியம் 12:29 நிமிடங்கள் மற்றும் 8 வினாடிகள் முதல் 12:30 நிமிடங்கள் மற்றும் 32 வினாடிகள் வரை 84 நொடிகள் சிலை பிரதிஷ்டை நடைபெறும்.
காசியின் டிராவிட் சகோதரர்களின் கூற்றுப்படி, முஹூர்த்தத்தின் சுத்திகரிப்பும் செய்யப்படும், இது ஜனவரி 19 அன்று மாலை 6 மணி முதல் மாலை 6:20 வரை நடக்கும் என்று கூறியுள்ளனர். பண்டிட் கணேஷ்வர் சாஸ்திரி தான் காசி காரிடாரின் திறப்பு விழாவுக்கான நேரத்தை முடிவு செய்த அதே அறிஞர். ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டுவதற்கான நல்ல நேரத்தையும் அவர் நிர்ணயித்திருக்கிறார்.
Isha Yoga : ஆதியோகி முன் நடைபெற்ற சக்திமிக்க சப்தரிஷி ஆரத்தி!
ஜோதிடத்தின்படி, இந்த முஹூர்த்தத்தின் ஆன்மா மேஷ லக்னத்தின் குரு. அதனால் ராமரின் ராஜ்ஜியம் பெருகும். வியாழனின் பார்வை 5, 7 மற்றும் 9 ஆம் வீட்டில் விழுகிறது. இதுவும் மங்களகரமானது. பகவான் ராமரும் அபிஜீத் முஹூர்த்தத்தில் பிறந்தார் தான். லக்னேஷ் குருவின் பார்வை படும் வீடுகள். அதன் செல்வாக்கு உலகம் முழுவதும் இந்தியாவின் நிலையை பலப்படுத்தும்.
மறுபுறம் ராமர் கோவிலின் கருவறை பணிகள் நிறைவடைந்துள்ளன. இப்போது ராம் லல்லா அமர்ந்திருக்கும் சிம்மாசனம் தங்கத்தால் முலாம் பூசப்படும். ஜனவரி 31ம் தேதிக்குள் கருவறையின் மேல் தளமும் தயாராகிவிடும். மூன்று சிலைகளில் ஒரு சிலை கும்பாபிஷேகத்துக்கு தேர்வு செய்யப்பட உள்ளது. அந்த சிலைகளும் தயார் நிலையில் உள்ளன. ஜனவரி 7ம் தேதி கும்பாபிஷேகம் செய்யப்பட உள்ள சிலை எது என்பது அப்போது முடிவு செய்யப்படும்.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
ராமர் கோவில் பிரான் பிரதிஷ்டை விழாவையொட்டி, ஜனவரி 20 முதல் 22 வரை ராமரை தரிசனம் செய்ய முடியாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. விமான நிலையத்தின் பாதுகாப்பிற்காக எஸ்எஸ்எஃப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.