Krishna Jayanthi 2024: ஆகஸ்ட் 26ம் தேதி இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி.. பக்தர்களுக்கு அழைப்பு!

கிருஷ்ணரின் 5251வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை இ.சி.ஆரில் உள்ள இஸ்கான் கோயிலில் கோகுலாஷ்டமி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. நள்ளிரவில் மகா அபிஷேகமும், பல்வேறு பக்தி நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

August 26 is Krishna Jayanti at ISKCON Temple tvk

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சென்னை இ.சி.ஆரில் உள்ள இஸ்கான் கோயிலில் கோகுலாஷ்டமி கோலாகலமாக கொண்டாட பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணரின் 5251வது பிறந்தநாளை முன்னிட்டு மாலை 6 மணிக்கு சம்பிரதாய அபிஷேகமும், அதைத் தொடர்ந்து நள்ளிரவில் மகா அபிஷேகமும் நடைபெறும். இந்த புனித சடங்கின் போது, அவர்களின் திருவுருவங்களுக்கு பால், தேன், தயிர், நெய் மற்றும் பழச்சாறுகளின் கலவையான பஞ்சாமிர்தத்தில் நள்ளிரவில் அபிஷேகம் செய்யப்படும். இதுதொடர்பான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 

இதையும் படிங்க: Janmashtami 2024 | கிருஷ்ணர் பூமியில் அவதரித்தது ஏன் தெரியுமா?

மகா அபிஷேகத்துடன் பல்வேறு பக்தி செயல்கள், சொற்பொழிவுகள், ஆரத்தி, கீர்த்தனைகள் நடைபெற உள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுவையான பிரசாதங்கள் வழங்கப்பட உள்ளது.

இதையும் படிங்க: கிருஷ்ண ஜெயந்தி அன்று கண்டிப்பாக பார்க்க வேண்டிய கோவில்களின் லிஸ்ட் இதோ!

கோகுலாஷ்டமியை முன்னிட்டு பூஜைகள், வழிபாட்டிற்குத் தேவையான அகர்பத்தி, விக்ரகங்கள், உடைகள், குழந்தைகள் உடைகள், பைகள், அணிகலன்கள் மற்றும் பல்வேறு பொருட்களை வழங்கும் பரிசுக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த கிருஷ்ண ஜெயந்தியை கோலாகலமாக கொண்டாட பக்தர்களும் வழிபாட்டில் பங்கேற்க இஸ்கான் கோயில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios