Asianet News TamilAsianet News Tamil

பிறர் மனைவியை கவர்தல்.. நம்பிக்கை துரோகம்.. கருட புராணத்தில் என்ன பாவத்திற்கு எந்த நரகம்?

கருடப் புராணத்தில் 28 நரகங்கள் இருப்பதாகவும், அதில் பாவம் செய்தவர்களுக்கு கொடுமையான தண்டனைகள் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

Attracting someone else's wife.. Betrayal of trust.. In the Garuda Purana, what is the hell for what sin?
Author
First Published Jul 25, 2023, 2:11 PM IST

ஷங்கர் இயக்கிய அந்நியன் படத்தை பார்த்தவர்களுக்கு நிச்சயம் கருட புரானத்தை பற்றி தெரிந்திருக்கும். கருடப் புராணத்தில் வரும் தண்டனைகளை தான் அந்நியன் தவறு செய்வோருக்கு வழங்குவது போல் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். மனிதர்கள் செய்யும் பாவ, புண்ணியங்கள் அடிப்படையில் அவர்கள் இறந்ததும் அவர்களுக்கு சொர்க்கமோ அல்லது நரகமோ கிடைக்கும். இறப்புக்கு பிறகு மனிதர்களின் ஆன்மாக்களுக்கு என்ன ஆகும் என்று கருடன் கேட்க, மகாவிஷ்ணு விளக்கி சொல்லும் கருத்துக்களை வியாச முனிவர் 18,000 ஸ்லோகங்களாக கருடப்புரணம் என்ற பெயரில் இயற்றி உள்ளார். கருடப் புராணத்தில் 28 நரகங்கள் இருப்பதாகவும், அதில் பாவம் செய்தவர்களுக்கு கொடுமையான தண்டனைகள் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

அந்த வகையில், நம்மை விட பெரியவர்களை இகழ்ந்து பேசினாலோ, நீச மொழியில் அருவருக்கத்தக்க வகையில் பேசினாலோ பாவம் என்றும், அந்த பாவத்திற்கு தண்டனையாக வாயில் இருந்து புழுக்கள் வரும் என்று கருடப்புராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் பிற உயிர்களை துன்புறுத்துவோருக்கு கொடூரமான சரீரம் கிடைக்கும் என்று கருடப் புராணத்தில் கூறப்பட்டுள்ளதாம். மனிதர்கள் செய்யும் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப அவர்கள் தண்டனை வழங்கப்படும் எனவும் கருட புராணத்தில் மகாவிஷ்ணு கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நம்பியவர்களை ஏமாற்றுவது, செய்நன்றி மறப்பது, பிறர் மனைவியை கவர்தல் போன்ற பாவங்களுக்கு தாமிஸிரம் நரகம் கிடைக்கும். பொன் பொருள், மனைவி ஆகியவற்றை கொள்ளையடித்த பாவிகள் தாமிஸ்ர நரகத்திற்கு செல்வார்களாம். தம்பதிகள் ஒருவரை ஒருவர் ஏமாற்றுவது, கொலை செய்வது கணவன் அல்லது மனைவிக்கு துரோகம் செய்து வஞ்சிக்கும் நபர்களுக்கு அநித்தாமிஸ்ர நரகம் கிடைக்கும். பிறருடைய பொருட்களை அழித்து, பலவந்தமாய் பொருள் பறிக்கும் சுயநலக்காரர்கள் ரௌவரம் என்ற நரகத்திற்கு செல்வார்களாம்.

மனைவியை துன்புறுத்தி வதைக்கும் நபர்களுக்கு லாலாபட்சம் நரகம் கிடைக்கும். காரணமின்றி பசுக்களை வதைப்பவர்கள் விசஸனம் என்ற நரகம் கிடைக்கும். எந்த தொந்தரவும் செய்யாத மிருகங்களை வதைக்கும் நபர்கள், பிராணிரோதம் நரகம் கிடைக்கும். ஒழுக்கக்குறைவாக பெரியோர்களை மதிக்காமல் மனம் போன வாழும் இழிவான மக்களுக்கு பூபோதம் என்ற நரகத்தை அடைவார்கள்.

பாவம், புண்ணியத்தை கண்டுகொள்ளாமல் காசுக்காக எதையும் செய்தால் அவர்கள் சான்மலி நரகத்தை அடைவார்கள். பிறர் உழைப்பை சுரண்டி வாழும் மனிதர்கள் கிருமிபோஜனம் என்ற நரகத்திற்கு செல்வார்கள். காம இச்சையால் பல கொடுமைகளை செய்யும் நபர்களுக்கு வஜ்ரகண்டகம் நரகம் கிடைக்கும். பொய் சொல்லி, பிறரது உடைமைகளை கவரும் பாவிகளுக்கு அக்னிகுண்டம் நரகம் கிடைக்கும்.

எளியோரை தண்டிப்பவர்கள், நீதிக்கு புறம்பாக நடக்கும் நபர்களுக்கு பன்றி முக நரகம் கிடைக்கும். தர்மத்தை மீறி தெய்வ நிந்தனை செய்யும் பாவிகளுக்கு அசிபத்திரம் நரகம் கிடைக்கும். உணவில் விஷம் வைப்பவர்கள், மிருகங்களை கொன்று உண்பவர்களுக்கு கும்பிபாகம் என்ற நரகம் கிடைக்கும்.

காகம் தலையில் தட்டினால் ஆபத்தா? உடனடியாக செய்ய வேண்டிய பரிகாரம் என்ன?

Follow Us:
Download App:
  • android
  • ios