Asianet News TamilAsianet News Tamil

காகம் தலையில் தட்டினால் ஆபத்தா? உடனடியாக செய்ய வேண்டிய பரிகாரம் என்ன?

சனி பகவானின் வாகனமாக திகழ்வது காகங்கள். எம லோகத்தின் வாயிலில், இரு பக்கங்களிலும் காகம் இருப்பதாகவும் சாஸ்திரம் சொல்கின்றது. பித்ருக்களின் வடிவமாக காக்கைகள் பார்க்கப்படுகிறது. 

crow touch the head what happen..What is the remedy?
Author
First Published Jul 21, 2023, 2:04 PM IST

சிலர் வீதியில் நடந்து செல்லும் பொழுது காகம் தலையில் தட்டிச் சென்றால் என்ன நடக்க போகிறதோ என்ற மன குழப்பத்தில் இருப்பார்கள். கவலை வேண்டாம். இந்த பரிகாரத்தை செய்தாலே போதும் அதில் இருந்து விடுபட்டு விடலாம்.

சனி பகவானின் வாகனமாக திகழ்வது காகங்கள். எம லோகத்தின் வாயிலில், இரு பக்கங்களிலும் காகம் இருப்பதாகவும் சாஸ்திரம் சொல்கின்றது. பித்ருக்களின் வடிவமாக காக்கைகள் பார்க்கப்படுகிறது. அதாவது நம் முன்னோர்கள் இறந்து போனவர்கள் நம்மிடையே காகங்களாக வளம் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நாம் அனைவரும் நம்பக்கூடிய ஒன்றாகும்.

இந்நிலையில், சிலர் வீதியில் செல்லும்பொழுது, காகம் தலையில் தட்டிச் செல்லும். அப்படிக் காகம் தலையில் தட்டினால் அல்லது நமது உடம்பில் பட்டால் சனியின் ஆதிக்கம் வந்து விட்டது என்று பொருளாகும். மேலும், உங்களுக்கு ஏதோ பிரச்சினை ஏற்படப்போகிறது. நீங்கள் உஷாராக இருக்க வேண்டும் என்பதற்காக முன்னோர்கள் ரூபத்தில் காகம் நம்மை எச்சரிப்பதாகும். 

அதற்கு தகுந்த பரிகாரங்களைச் செய்து சனீஸ்வர சாந்தியும் செய்ய வேண்டும். உடல் முழுவதும் நனைய நீராடி முடித்து அதன்பிறகு முழு பயபக்தியோடு ஆலயத்திற்குச் சென்று எள் தீபம் ஏற்றி முறைப்படி பரிகாரம் செய்தால் காக வாகனத்தான் இறக்கம் காட்டுவார். காகத்திற்கும் அன்னமிடுவது நல்லது. இனி காகம் தலையில் தட்டி விட்டால், அதனால் ஏதாவது பேராபத்து ஏற்படுமோ என்ற மன குழப்பத்தில் நீங்களே உங்களுக்கான பிரச்சினைகளை உண்டாக்கி கொள்ளாதீர்கள். நம்முடைய மறைந்த முன்னோர்கள் ரூபத்தில் இருக்கும் காகம் என்றைக்குமே நமக்கு தீங்கு விளைவிக்காது.

Follow Us:
Download App:
  • android
  • ios