Asianet News TamilAsianet News Tamil

நேரமே சரியில்லையா? இந்த இலைகள் இருந்தால் போதும்.. எந்த கெட்ட சம்பவமும் நடக்காது..

கெட்ட நேரத்திலிருந்து தப்பிக்க, இந்த எளிய பரிகாரத்தை செய்து பாருங்கள். 

Are you a person who complains that the timing is not right? If these leaves are enough, nothing bad will happen..
Author
First Published Jul 29, 2023, 3:23 PM IST

நாம் எல்லோரும் நம் வாழ்வில் ஒருமுறையாவது மோசமான தருணங்களை கடந்து வந்திருப்போம். ஒரு காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்று பல நாட்களாக கடுமையாக முயற்சி செய்திருப்போம். ஆனால் இறுதியில் கெட்ட நேரம் நம் முயற்சிகள் அனைத்தையும் வீணடிக்கும். கடைசியில் நமக்கு தோல்வியே மிஞ்சும். அதே போல் எல்லாமே கைக்கு வருவது போல் இருக்கும். ஆனால் கடைசி நேரத்தில் அது கைகூடாமல் போய்விடும். இதுபோன்ற பல நிகழ்வுகளை நம்மில் பலரும் கடந்திருப்போம்.

சிலருக்கு கெட்ட நேரத்தில் தான் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன. இரு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் போது, சில இடங்களில் மோதி கை, கால் உடைந்து ரத்த காயங்கள் ஏற்பட்டு வருகிறது.  ஏதாவது ஒரு நல்ல விஷயம் நடந்தால், ஆனலை அதைவிட பெரிய கெட்ட விஷயம் ஒன்று நடக்கும். இப்படி நேரமே சரியில்லை என்று புலம்பும் நபர்களுக்கு இந்த பரிகாரம் கைகொடுக்கும்.

48 நாட்கள் இந்த எளிய பரிகாரத்தை செய்தால் போதும்.. வருமானம் அதிகரிக்கும்.. பணவரவு பெருகும்..

இந்த கெட்ட நேரத்திலிருந்து தப்பிக்க, இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். அதற்கு சில மருதாணி இலைகள் இருந்தால் போதும். ஆம். சில மருதாணி இலைகளை ஒரு மஞ்சள் துணியில் கட்டி உங்கள் பர்ஸில் வைத்துக்கொள்ளுங்கள். அல்லது உங்கள் ஹேண்ட் பேக் அல்லது பாக்கெட்டில் கூட வைத்துக் கொள்ளுங்கள். இந்த மருதானி இலையை எப்போதும் வைத்திருந்தால், கெட்ட நேரத்திலும் உங்களுக்கு எந்த அசம்பாவிதமும் ஏற்படாது.

பெரிய தோல்வி இருக்காது. ஏதோ ஒரு வடிவில் உங்களை அம்பாள் காப்பாற்றுவாள். மருதாணி இலைகளுக்கு அவ்வளவு சக்தி உண்டு. அடிக்கடி விபத்தில் சிக்குபவர்கள் இந்த மஞ்சள் நிற முடிச்சை உங்கள் காரின் முன் கட்ட வேண்டும். சைக்கிள் பைக் கார் நீங்கள் எந்த வாகனத்தை பயன்படுத்தினாலும், இந்த மருதாணி இலையை வாகனத்தின் முன் கட்டி தொங்க விடவும். இந்த மருதாணி இலைகளை மாதத்தில் ஒருநாள் மாற்றினால் போதும். மருதாண் இலை காய்ந்தால் கூட இந்த பரிகாரம் வேலை செய்யும். 

Vastu Tips: வடக்கு திசையில் இந்த பொருளை வைத்தால், செல்வ பெருகும்.. எதிர்மறை ஆற்றலும் விலகும்..

Follow Us:
Download App:
  • android
  • ios