ஏப்ரல் மாதத்தின் முக்கிய விரதம், பண்டிகைகள் குறித்த முழுவிவரம்.. !
april Month 2023: ஏப்ரல் மாதத்தில் வரும் முக்கிய விரதம், பண்டிகைகள் குறித்த தகவல்களை இங்கு தொகுத்துள்ளோம்.
ஒவ்வொரு மாதமும் சிறப்பு விரதங்களும், பண்டிகைகளும் வரும். அந்த நாள்களை தெரிந்து கொண்டு மறக்காமல் இறைவனுக்கு விரதமிருந்து வேண்டிக் கொண்டால் சிறப்பான பலன்களை பெறலாம். விரதம் இருக்காவிட்டால் கூட, அன்றைய தினம் கோயிலுக்கு சென்று வழிபட்டால் கூட நல்ல பலன்கள் கிடைக்கும். அதற்கு உங்களுக்கு உதவும் வகையில் ஏப்ரல் மாதம் 2023 ஆண்டிற்கான முக்கிய விரதம், விசேஷங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என மூன்று மதங்களுக்கும் சிறப்பான மாதம். பங்குனி உத்திரம், ரம்ஜான், ஈஸ்டர், அட்சய திரிதியை ஆகிய பண்டிகைள் ஏப்ரலில் வருகின்றன. வாங்க தெரிந்து கொள்ளலாம்.
முக்கிய விரத தினங்கள்
- ஏப்ரல் 1 (சனி), ஏப்ரல் 16 (ஞாயிறு) - ஏகாதசி
- ஏப்ரல் 3 (திங்கள்), ஏப்ரல் 17 (திங்கள்) - பிரதோஷம்
- ஏப்ரல் 5 (புதன்) - பௌர்ணமி
- ஏப்ரல் 9 (ஞாயிறு) - சங்கடஹர சதுர்த்தி
- ஏப்ரல் 11 (செவ்வாய்), ஏப்ரல் 26 (புதன்) - சஷ்டி
- ஏப்ரல் 14 (வெள்ளி) - திருவோணம்
- ஏப்ரல் 18 (செவ்வாய்) - சிவராத்திரி
- ஏப்ரல் 19 (புதன்) - அமாவாசை
- ஏப்ரல் 22 (சனி) - கிருத்திகை
- ஏப்ரல் 23 (ஞாயிறு) - சதுர்த்தி
இந்து பண்டிகைகள் விவரம்
- ஏப்ரல் 05 - பங்குனி உத்திரம்
- ஏப்ரல் 14 - தமிழ் வருடப்பிறப்பு
- ஏப்ரல் 23 - அட்சய திரிதியை
- ஏப்ரல் 25 - ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி
- ஏப்ரல் 30 - ஸ்ரீ வாசவி ஜெயந்தி
கிறிஸ்தவம் - முக்கிய நாட்கள்
- ஏப்ரல் 02 - குருத்து ஞாயிறு
- ஏப்ரல் 06 - பெரிய வியாழன்
- ஏப்ரல் 07 - புனித வெள்ளி
- ஏப்ரல் 08 - புனித சனி
- ஏப்ரல் 09 - ஈஸ்டர்
இஸ்லாம் - முக்கிய தினங்கள்
- ஏப்ரல் 06 - திருச்சி தப்பேரா ஆலம்பதூஷா உரூஸ்
- ஏப்ரல் 12 - மௌலானா அலி உரூஸ்
- ஏப்ரல் 18 - லைலத்துல்கதர்
- ஏப்ரல் 22 - ரம்ஜான்
இதையும் படிங்க: கோயிலில் இருந்து கொண்டு வரும் இந்த 3 பொருளை பிறருக்கு கொடுக்காதீங்க.. வீட்டிற்கு வந்த தெய்வம் வெளியேறிவிடும்.!
இதையும் படிங்க: முடி, நகம் வெட்ட எந்த நாள் சிறந்தது என்று தெரியுமா?