இன்று முழு சந்திர கிரகணம்! தோஷ பரிகாரங்கள் என்ன? யாருக்கு பாதிப்பு அதிகம்!

Lunar Eclipse இந்த ஆண்டின் கடைசி சந்திரகிரகணம் இன்று  நிகழ்கிறது. பௌர்ணமியுடன் கூடிய இந்த முழு சந்திர கிரணகம் மேஷ ராசியில் ராகு கிரஹஸ்த சந்திர கிரகணம் நிகழ்கிறது. 
 

All you know about lunar eclipse and what to do and what don't to do

சந்திர கிரகணம்
 

நிலவாகிய சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது.  சந்திரன் மற்றும் சூரியன் பூமியின் எதிரெதிர் பக்கங்களில் இருக்கும்போது முழு சந்திர கிரகணம் ஏற்படும். ​​அல்லது, பூமியின் நிழலின் ஒரு பகுதி மட்டுமே சந்திரனை மறைக்கும் பொழுது ஒரு பகுதி சந்திர கிரகணம் ஏற்படும். .

முழு சந்திர கிரகணம் நிகழும் நேரம் 

இந்திய நேரப்படி சந்திர கிரகணம் பிற்பகல் 02.38 மணிக்கு தொடங்குகிறது. முழு கிரகணம் மாலை 03.45 மணிக்கு தொடங்கி மாலை 05 மணி 11 நிமிடத்திற்கு முடிகிறது. மொத்த  கிரகணமும் மாலை 06.19 நிமிடத்திற்கு முடிகிறது.

தமிழகத்தில் எப்போது பார்க்கலாம்

பகல் நேரத்தில் சந்திர கிரகணம் நிகழ்வதால் இந்தியாவில் தெரியாது. மாலையில் சந்திரன் தோன்றி கிரகணம் முடியும் வரை காணலாம். சென்னையில் மாலை 05.38 மணியிலும், பகுதி சந்திர கிரகணத்தை பார்க்கலாம், சேலத்தில் மாலை 05.49 மணிக்கும், கோவையில் மாலை 05.54 மணிக்கும் பகுதி சந்திர கிரகணம் தெரியும்.

மேஷ ராசியில் நிகழும் சந்திர கிரகணம்

நிகழும் சந்திர கிரகணம் சில நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு தோஷத்தை உண்டாக்குகிறது. அதன்படி,  அசுவினி, பரணி, கிருத்திகை, பூரம்,பூராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இந்த கிரகணம் தோஷதாகும். மேற்கண்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பரிகார தோஷம் செய்து கொள்வது அவசியம். சந்திர கிரகணம் முடிந்த பின்னர் குளித்து விட்டு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றி வழிபட்டு வந்து சாப்பிடலாம்.

ஒன்றாக வருகிறது பௌர்ணமியும் கிரகணமும்… இந்தாண்டு அன்னாபிஷேகம் எப்போது? முழு விவரம் உள்ளே!!
 

கிரகண நேரத்தில் என்னென்ன செய்ய கூடாது

நிகழும் சந்திர கிரகண நேரத்தின் போது சமையல் செய்ய கூடாது. குறிப்பாக சாப்பிடக்கூடாது. நகத்தை வெட்டவோ, முடி வெட்டவோ கூடாது. எந்த வேலையும் பொதுவாக செய்யக்கூடாது.  கர்ப்பிணிகள், வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் நோயாளிகள் கிரகண நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது அவசியம். 

இதையும் படிங்க: அபிஷேகங்களில் அன்னாபிஷேகம் என்றால் என்ன? யாருக்கு செய்யப்படுகிறது? எப்போது செய்யப்படுகிறது?

கிரகண நேரத்தில் என்னென்ன செய்யலாம் 

சந்திர கிரகணம் முடியும் போது, தர்ப்பணம் செய்வது மிகவும் புண்ணியம் தரும். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். சந்திரகிரகண நேரத்தில், யாகசாலை அமைத்து பூஜை செய்யலாம். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios