ஆவணி அவிட்டம் 2023 : பூணூல் மாற்ற உகந்த நேரம் எது? அதன் முக்கியத்துவம் என்ன?

ஆவணி அவிட்டம் நாளில் ஆற்றங்கரையிலோ அல்லது குளத்தின் கரையிலோ குளித்துவிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நடைமுறையும் உள்ளது.

Aavani Avittam 2023 : Date, time, best time to change Poonul? What is its significance? Rya

ஆவணி அவிட்டம் என்பது ஆண்கள் மட்டுமே கடைபிடிக்கும் விரதமாகும். ஆவணி மாத பௌர்ணமியை ஒட்டி வரும் அவிட்ட நட்சட்த்திர நாளில் பிராமணர்கள் மற்றும் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த சிலர் மட்டுமே இந்த விரத்தை கடைபிடிக்கின்றனர். ரிக், யஜூர் வேதங்களை படிக்கும் பிராமணர்கள் இந்த தேதியில் பூணூலை மாற்றிக் கொள்கின்றனர். சாம வேதம் படிப்பவர்கள் விநாயகர் சதுர்த்தி தினத்தில் பூணூல் மாற்றிக் கொள்ளும் வழக்கம் உள்ளது. ஆவணி அவிட்டம் நாளில் ஆற்றங்கரையிலோ அல்லது குளத்தின் கரையிலோ குளித்துவிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நடைமுறையும் உள்ளது.

முன்னோர்களின் வழிபாட்டிற்கு பிறகு பூணூலை மாற்றிக் கொண்டு தங்கள் வேதங்களை படிக்க தொடங்குவார்கள். இதுவே சமஸ்கிருதத்தில் உபகர்மா என்று அழைக்கப்படுகிறது. உபகர்மா என்பதற்கு தொடக்கம் என்று அர்த்தம். இந்த உபகர்மாவே தமிழில் ஆவணி அவிட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆவணி அவிட்ட தினத்தில் விரதம் இருந்து பூணூல் அணிந்து கொண்டால் குடும்பத்தில் எந்த துன்பமும் நெருங்காது என்பது ஐதீகம்.

இந்த ஆவணி அவிட்ட நாளில் தான் பெருமாளின் அவதாரங்களில் ஒன்றான ஹயக்ரீவர், அசுரர்கள் திருடிவந்த வேதத்தை மீட்டு வந்து அவற்றை புனிதப்படுத்தியதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அதனால் தான் இந்த பூணூல் மாற்றிக்கொள்ளும் சடங்கு மற்றும் வேதங்கள் படிக்கும் முறையும் ஏற்பட்டது. எனவே இந்த நாள் ஹயக்ரீவ ஜெயந்தி என்றும் கொண்டாடப்படுகிறது.

 

வராகி அம்மனுக்கு இவர்களை தான் மிகவும் பிடிக்குமாம்.. பிடிக்காதவர்கள் யார் தெரியுமா?

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆவணி அவிட்டம் ஆகஸ்ட் 30, புதன்கிழமை வருகிறது. ஆகஸ்ட் 30 இரவு 9.58 வரை அவிட்டம் நட்சத்திரம் உள்ளது. எனினும் பௌர்ணமி திதி காலை 10.45 மணி வரை மட்டுமே உள்ளது. காலை 7.30 முதல் 9.00 வரை எமகண்டமாகும். எனவே பூணூல் மாற்றுவோர் காலை 7.15 மணிக்கு முன்பே பூணூலை மாற்றிவிடுவது. இல்லை எனில் 9.15 மணி முதல் 10.15 வரை இருக்கும் நல்ல நேரத்தில் பூணூல் மாற்றிக்கொள்ளலாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios