இன்று ஆடி 2வது வெள்ளிக்கிழமை: அம்மனை வழிபட உகந்த நேரம் எது தெரியுமா?
Aadi Masam 2nd Velli 2024 : இன்று ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமை. இதனுடன் முருகப்பெருமானுக்குரிய தேய்பிறை சஷ்டியும் சேர்ந்தே வருவதால், இந்த நாள் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கும் ஒரு அற்புதமான நாளாகக் கருதப்படுகிறது.
ஆடி மாதம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு ஆடி மாதத்தில் மொத்தம் 5 வெள்ளிக்கிழமைகள் வருகிறது. அந்த வகையில், ஆடி முதல் வெள்ளிக்கிழமை முடிந்த நிலையில், தற்போது இரண்டாவது வெள்ளிக்கிழமையும் இன்று (ஜூலை.26) ஆரம்பமாகியுள்ளது. இந்த இரண்டாவது ஆடி வெள்ளிக்கிழமையுடன் முருகப்பெருமானுக்குரிய தேய்பிறை சஷ்டியும் சேர்ந்தே வருவதால், இந்த நாள் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கும் ஒரு அற்புதமான நாளாகக் கருதப்படுகிறது. இதனால் தான் இந்நாளில் அம்மன் மற்றும் முருகன் பெருமானுக்கு வழிபாடு செய்வது மிகவும் சிறப்பாகும்.
ஆடி 2வது வெள்ளிக்கிழமை அம்மனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்:
இன்று ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமை என்பதால் இந்நாளில் அம்மனின் ரூபங்களில் ஒன்றான காமாட்சி அம்மனை வழிபடுவது மங்களகரமானதாகும். தேய்பிறை சஷ்டியுடன் சேர்ந்து வரும் ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமையான இன்று காமாட்சி அம்மனை வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும், திருமண தடை நீங்கும் என்பது ஐதீகம்.
இதையும் படிங்க: இன்று ஆடி மாதம் தேய்பிறை பஞ்சமி.. வாராஹி அம்மனை இப்படி வழிபடுங்க..கேட்டது கிடைக்கும்!
வழிபடும் நேரம் மற்றும் முறை:
ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமையான இன்று அதிகாலையில் எழுந்து, நீராடி விட்டு விரதத்தை தொடங்க வேண்டும். ஒருவேளை உங்களால் நாள் முழுவதும் விரதம் இருக்க முடியவில்லை என்றால், பால் அல்லது பழம் சாப்பிடலாம். அதுபோல, ஒருவேளை மட்டும் விரதத்தை கடைபிடிக்கலாம். இரவு 8 மணி முதல் ஒன்பது மணி வரை காமாட்சி அம்மனை வழிபட உகந்த நேரமாகும். ஆகவே, இந்த குறிப்பிட்ட நேரத்தில் காமாட்சி அம்மன் படத்திற்கு பூக்களால் அலங்கரிக்கவும். பின் மலர்கள் மட்டும் குங்குமம் கொண்டு அர்ச்சனை செய்யுங்கள். மேலும், சர்க்கரை பொங்கல், பாயசம் போன்ற ஏதாவது ஒரு இனிப்பை நைவேத்தியமாக படைத்து வழிபடுங்கள். பிறகு படைத்ததை சாப்பிட்டு, உங்களது விரதத்தை முடித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: வெறும் 15 நிமிடத்தில் சுவையான ஆடிப்புரம் அக்காரவடிசல் தயார்.. ரெசிபி இதோ!
பொதுவாகவே, உங்களது பிரச்சனைகள் அனைத்தும் தீர நீங்கள் அம்பாளை காலையில் வழிபடுவதை விட, மாலை நேரத்தில் வழிபடுவது தான் உகந்ததாகும். ஏனெனில், வாழ்க்கையில் பலவிதமான கஷ்டங்கள் தரக்கூடிய இருள் கிரகங்களை ஓட்டு கூடியவர்கள் அம்மாள். எனவே, அவளுக்கு உரிய வழிபாடு நேரமும் மாலை ஆகும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D