Aadi Krithigai Viratham 2024 : வேண்டிய வரங்களை அள்ளிக் கொடுக்கும் ஆடி கிருத்திகை விரதம்!
Aadi Krithigai Viratham 2024 : ஆடி கிருத்திகை அன்று விரதம் இருப்பது எப்படி? அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை குறித்து இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதம் தமிழ் மாதங்களில் ஒன்றாகும். ஆடி மாதத்தில் வரும் ஆடி கிருத்திகை மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. பொதுவாக, கார்த்திகை நட்சத்திரத்தில் விரதம் இருப்பது ரொம்பவே நல்லது என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக, ஆடி கிருத்திகை அன்று விரதம் இருந்தால் பல நன்மைகள் கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே, இவ்வளவு சிறப்பு மிக்க இந்த ஆடி கிருத்திகை அன்று விரதம் இருப்பது எப்படி என்பது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஆடி கிருத்திகை ஏன் சிறப்பு?
சிவபெருமானின் அருளால் உருவானவர்தான் முருகப்பெருமான். இவர் 6 கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டார். ஆகையால், ஒரே கார்த்திகை நட்சத்திரமாக மாறிய
அந்தப் 6 பெண்களை கௌரவிக்கும் விதமாக தான், கார்த்திகை நட்சத்திரம் அன்று முருகப் பெருமானை வழிபடும் வழக்கம் கொண்டுவரப்பட்டது. பொதுவாகவே ஆண்டுக்கு இரண்டு கிருத்திகைகள் உள்ளது. ஒன்று கிருத்திகை, மற்றொன்று ஆடி கிருத்திகை ஆகும்.
இதையும் படிங்க: ஆடி மாத ஸ்பெஷல் அம்மன் கூழ்.. இனி வீட்டிலேயும் செய்யலாம்.. ரெசிபி இதோ!
ஆடி கிருத்திகை அன்று தான் ஒவ்வொரு முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும். ஆனால், அவை எல்லாவற்றையும் விட முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி கோவிலில் தான் ஆடி கிருத்திகை மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். மேலும், அந்நாளில் முருகப்பெருமானின் பக்தர்கள் காவடி ஏந்தி, திருத்தணி மலையில் மீது ஏறி தங்களது நேர்த்தி கடனை செலுத்துவார்கள். மேலும், இந்நாளில் கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் போன்ற முருகனுக்கு உரிய பாடல்களை கேட்பது உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும் என்று ஐதீகம்.
இதையும் படிங்க: ஆடி கிருத்திகை 2024 எப்போது..? இந்த நாள் முருகனுக்கு ஏன் சிறப்பு ..?
2024 ஆடி கிருத்திகை விரதம் இருக்கும் முறை:
இந்த ஆண்டு ஆடி கிருத்திகை ஜூலை 29ஆம் தேதி திங்கள் கிழமை அன்று வருகிறது. ஆடிக்கிருத்திகை அன்று விரதம் இருக்க நினைப்பவர்கள், அதிகாலையிலேயே சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து, நீராடி விட்டு, பூஜை அறையை நன்கு சுத்தம் செய்யுங்கள். பின் முருகப்பெருமானின் படத்திற்கு முன் அரிசி மாவில் ஆறு கோணம் கோலம் போட்டு, முருகப்பெருமானின் படத்திற்கு இருபுறமும் நெய் தீபம் ஏற்றி, பூக்கள் மற்றும் பழங்களை கொண்டு நிவேதனம் வையுங்கள். பிறகு நீங்கள் உணவு ஏதும் சாப்பிடாமல் நாள் முழுவதும் கந்த சஷ்டி கவசம் அல்லது சண்முக கவசத்தை முழு மனதுடன் படியுங்கள். ஆனால் அவ்வப்போது தண்ணீர் மட்டும் குடிக்கலாம். ஒருவேளை நீங்கள் உடல்நிலை ஏதும் சரியில்லாமல் மருந்து எடுத்துக் கொண்டால் கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்பதால், உப்பு சேர்க்கப்படாத மட்டும் சாப்பிடுங்கள். பிறகு மாலை வேளையில் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு உங்களது விரதத்தை நிறைவு செய்யுங்கள்.
ஆடி கிருத்திகை விரதத்தின் பலன்கள்:
ஆடி கிருத்திகை என்று விரதம் இருந்தால் எந்த ஒரு கிரஹ தோஷமும் நீங்கும். அதுபோல கால சர்ப்ப தோஷம், நாகதோஷம், திருமணம் தடைகள், பித்ரு சாபம் ஆகியவை நீங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். தீராத கஷ்டங்களும் தீரும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D