ஆடி அமாவாசை 2024: அன்றைய தினம் காகத்திற்கு உணவு வைச்சா.. வீட்டுல பணம் பெருகுமா?
Aadi Amavasai 2024 : ஆடி அமாவாசை அன்று காக்கைகளுக்கு உணவு வழங்கினால் பித்ருக்களின் ஆசி நமக்கும் நம்முடைய சந்ததிக்கும் முழுமையாக கிடைக்கும் என்பது ஐதீகம்.
அமாவாசை என்பது முன்னோர்களை வழிபடுவதற்கு உரிய நாள் என்பதால், இந்நாளில் விரதம் இருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். மாதந்தோறும் வரும் அமாவாசை நாளில் விரதமிருந்து முன்னோர்களை வழிபட முடியாதவர்கள், தை, புரட்டாசி, ஆடி என இந்த மூன்று மாதங்களில் வரும் அமாவாசையில் கண்டிப்பாக விரதம் இருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம்.
அதுவும், ஆடி அமாவாசை என்றால் சொல்லவே வேண்டாம். ஏனெனில், இந்நாளில் தான் நம்முடைய முன்னோர்கள் பூலோகத்திற்கு இறங்கி வந்து நம்மை ஆசீர்வதிப்பார்கள் என்று நம்பப்படுகிறது. இப்படி வரும் முன்னோர்கள் காக்கை வடிவில் நம்முடைய வீட்டிற்கு வருவார்கள் என்று சொல்லப்படுகிறது. இதனால்தான் இந்நாளில், காகங்களுக்கு முதல் உணவை படைப்பது வழக்கம். இப்படி காக்கைகளுக்கு படையில் வைப்பதன் மூலம், பித்ருக்களின் ஆசி நமக்கும் நம்முடைய சந்ததிக்கும் முழுமையாக கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆடி அமாவாசை 2024:
இந்த ஆண்டு ஆடி அமாவாசையானது, தட்சிணாய புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசை ஆகும். மேலும், பித்ருலோகத்தில் இருந்து, நம்மை பாதுகாக்கவும் நமக்கான அனைத்து நன்மைகளையும் தந்து நம்மை ஆசீர்வதிக்கவும் அவர்கள் பூமிக்கு வரும் காலம் என்பதால் மிகவும் விசேஷமான நாளாகக் கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி, தந்தை வழி உறவுகளுக்கு காரணமாக இருக்கும் கிரகமான சூரியனுக்குரிய ஞாயிற்றுக்கிழமையிலும், கருமக்காரன் என்று அழைக்கப்படும் சனி பகவானுக்குரிய பூச நட்சத்திரத்தில் இணைந்து வருவதால், இந்த 2024 ஆண்டு ஆடி அமாவாசையானது மிகவும் பிரசித்தி பெற்ற நாளாக கருதப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு ஆடி அமாவாசையானது ஆகஸ்ட் 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆடி அமாவாசையில் வழிபட சிறந்த நேரம் எது? தர்ப்பணம் கொடுக்க முடியாதவங்க என்ன செய்தால் முன்னோர் ஆசி கிடைக்கும்!!
ஆடி அமாவாசை அன்று காகத்திற்கு உணவு வைக்க வேண்டும்?
பொதுவாகவே, ஆடி அமாவாசை நாளில் காகத்திற்கு முதல் உணவு வைப்பது வழக்கத்தில் உள்ளது. அதுவும், சமைத்த உணவை முதலில் வாழை இலையில் வைத்து அதை காகத்திற்கு வழங்கப்படும் பிறகு முன்னோர்களுக்கு படைத்து வீட்டில் உள்ளவர்கள் சாப்பிடுவார்கள். எத்தனையோ பறவைகள் விலங்குகள் இருந்து ஏன் காகத்திற்கு மட்டும் உணவு வழங்கப்படுகிறது என்று நீங்கள் யோசிக்கலாம். இதற்கான அறிவியல் மற்றும் ஜோதிட காரணங்கள் இங்கே..
இதையும் படிங்க: ஆடி அமாவாசை 2024 எப்போது? இந்த 1 எளிய தானம் செய்ங்க.. இனி அதிஷ்டம் தான்!
காகத்திற்கு உணவு வழங்குதல்:
காகம் சனி பகவானின் வாகனம் ஆகும். மேலும், இது சனியின் தூதுவன் என்றும் சொல்லலாம். காகத்திற்கு உணவு வழங்கினால் நம்முடைய முன்னோர்கள் மகிழ்ச்சியுடன் நமக்கு ஆசிகளை வழங்குவார்கள் என்பது ஐதீகம் இதனால் தான் அமாவாசை நாளில் காகங்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, பூலோகத்தில் நாம் செய்யும் தர்ப்பணம், திதி போன்ற காரியங்களை பித்ருலோகத்தில் இருக்கும் நம்முடைய முன்னோர்களிடம் கொண்டு போய் சேர்ப்பது காகம் தான் என்று சொல்லப்படுகிறது.
காகத்திற்கு உணவு வழங்குவதால் கிடைக்கும் பலன்கள்:
ஆடி அமாவாசை நாளில் காகத்திற்கு உணவு வைப்பதற்கு சில வழிமுறைகள் உள்ளது, அவற்றின்படி காகத்திற்கு உணவு வழங்கினால் முன்னோர்களின் ஆசி நமக்கு முழுமையாக கிடைக்கும் என்பது ஐதீகம். அதுமட்டுமின்றி, நமது வாழ்க்கையில் மெல்ல மெல்ல வீட்டில் வளர்ச்சி ஏற்படும். இந்த வளர்ச்சி உங்களுக்கு பணத்தை அல்லது செல்வத்தைக் கொண்டு வந்து சேர்க்கும்.. மேலும் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் குறையும். பித்ரு தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் நீங்கும். இதனால் தான் ஆடி அமாவாசை நாளில் கண்டிப்பாக காகத்திற்கு உணவு வைக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D