Asianet News TamilAsianet News Tamil

ஆடி அமாவாசையில் வழிபட சிறந்த நேரம் எது? தர்ப்பணம் கொடுக்க முடியாதவங்க என்ன செய்தால் முன்னோர் ஆசி கிடைக்கும்!!

Aadi Amavasai 2024: ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தால், புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

what are the significance and special about aadi amavasai 2024 in tamil mks
Author
First Published Aug 2, 2024, 7:30 PM IST | Last Updated Aug 3, 2024, 9:06 AM IST

ஒவ்வொரு மாதமும் அமாவாசை வரும். ஆனால், ஆடி, தை, புரட்டாசி ஆகிய மூன்று மாதங்களில் வரும் அமாவாசை தான் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆடி அமாவாசை மிகவும் முக்கியமான அமாவாசை என்பதால், இந்நாளில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தால், புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஆடி அமாவாசை என்றால் என்ன? 
ஆடி அமாவாசை என்பது பித்ரு தோஷத்தை போக்கும் சிறந்த நாளாக கருதப்படுகிறது. மேலும், திருமணம், குழந்தை பாக்கியம் என வீட்டில் நடக்கும் அனைத்து சுப காரியங்களும் தடையில்லாமல் முன்னோர்களின் ஆசியும் நடக்கும் என்பது ஐதீகம்.

ஆடி அமாவாசை சிறப்பு:
ஆடி அமாவாசை அன்று மறைந்த நம் முன்னோர்கள் பித்துரு லோகத்திலிருந்து பூலோகத்திற்கு செல்லும் நாள். இதனால் தான் தட்சிணாயன புண்ணிய காலத்தில் முதல் அமாவாசையான ஆடி அமாவாசை மிகவும் பிரசித்திப் பெற்ற நாளாகக் கருதப்படுகிறது.

இதையும் படிங்க:  வார விடுமுறை, ஆடி அமாவசைக்கு வெளியூர் செல்லனுமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து தெரியுமா.?

ஆடி அமாவாசை திதி, தர்பணத்தின் சிறப்பு:
ஆடி அமாவாசை அன்று நம் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தால், அது நம் முன்னோர்களுக்கு சென்றடையும் என்பது ஐதீகம். அதுமட்டுமின்றி, அந்நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு வந்தால் முன்னோர்களுக்கு மோட்சம் கிடைக்கும் மற்றும் நம்முடைய சந்ததிகளுக்கு நன்மைகள் பல கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

2024 ஆடி அமாவாசை எப்போது மற்றும் திதி கொடுக்க உகந்த நேரம் என்ன?
இந்த 2024 ஆம் ஆண்டு ஆடி அமாவாசை ஆகஸ்ட் 4ஆம் தேதி ஆடி 19 அதாவது, நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. மேலும், ஆகஸ்ட் 3ஆம் தேதி மாலை 4.56 மணிக்கு தொடங்கி ஆகஸ்ட் 4ஆம் தேதி மாலை 5.32 வரை அமாவாசை திதி கொடுக்கலாம்.

இதையும் படிங்க:  Aadi Amavasai 2024: ஆடி அமாவாசையில் காகத்திற்கு உணவு கொடுங்க;கடன் பிரச்சினை; செய்வினை கோளாறுகள் நீங்கும்!!

தர்ப்பணம் கொடுக்க உகந்த நேரம்:
ஆடி அமாவாசை நாளில் காலை 6 மணி முதல் 11:55 மணி வரை தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை வழிபட உகந்த நேரமாகும். அதுபோல இந்த ஆண்டு ஆடி அமாவாசை ஞாயிற்றுக்கிழமை அன்று வருவதால் பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை எமகண்ட நேரம் என்பதால், இந்த நான் நேரத்தில் தர்ப்பணம் கொடுப்பது உகந்தது அல்ல என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எனவே உரிய நேரத்தில் தர்ப்பணம் கொடுப்பதை சிறப்பு.

ஆடி அமாவாசை நாளில், முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் தரப்பணம் கொடுப்பது வேண்டும். ஒருவேளை, உங்களால் தர்ப்பணம் கொடுக்க முடியவில்லை என்றால், நீங்கள் ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கலாம். இப்படி செய்வதன் மூலம், பித்ரு தோஷம் நீங்கி, குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்லுகின்றது. அதுபோல அந்நாளில் காகத்திற்கு உணவு வழங்கினால், முன்னோர்களை மகிழ்ச்சி அடைவார்களாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios