ஆடி அமாவாசை 2024 எப்போது? இந்த 1 எளிய தானம் செய்ங்க.. இனி அதிஷ்டம் தான்!
Aadi Amavasai 2024 : இந்த ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களின் ஆசி பெற அவர்களை எப்படி வழிபட வேண்டும் மற்றும் என்ன தானம் செய்ய வேண்டும் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
அமாவாசை என்பது முன்னோர்களை வழிபாடு செய்வதற்கு உரிய சிறப்பு நாளாகும். இந்நாளில், முன்னோர்களை நினைத்து விரதம் இருந்து, அவர்களுக்கு பிடித்தமான உணவு சமைத்து, அதை முன்னோர்களுக்கு கொடுப்பதாக நினைத்து காக்கைகளுக்கு கொடுத்த பிறகு வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிடுவது தான் வழக்கம். சிலரோ ஒரு குறிப்பிட்ட அமாவாசை நாளில் மட்டும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். இப்படி செய்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஆடி அமாவாசை 2024:
பொதுவாகவே, ஒவ்வொரு மாதமும் அமாவாசை வரும். ஆனால் தை புரட்டாசி ஆடி மாதங்களில் வரும் அம்மாவாசை தான் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அந்த வகையில் தற்போது ஆடி மாதம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆடி அமாவாசையானது ஆகஸ்ட் 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வருகின்றது. எனவே, இந்த ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களின் ஆசி பெற அவர்களை எப்படி வழிபட வேண்டும் மற்றும் என்ன தானம் செய்ய வேண்டும் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
இதையும் படிங்க: ஆடி 18 பெருக்கு; தாலி கயிறு மாத்தும் போது 'இத' மறக்காதீங்க.. அவசியம் தெரிஞ்சிகோங்க..!
ஆடி அமாவாசை அன்று முன்னோர்களை வழிபடும் முறை:
ஆடி அமாவாசை அன்று நல்ல நேரம் பார்த்து வீட்டில் இருந்து கிளம்புங்கள். பின் மளிகை கடையில், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வெல்லத்தை வாங்குங்கள். பிறகு, துணி கடைக்கு சென்று வேஷ்டி, துண்டு என ஏதாவது ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். பின் வாங்கி வந்த பொருளை பூஜை அறையில் வைத்து, முன்னோர்களால் ஏற்பட்ட சாபம் நீங்கவும், அவர்களது ஆசி கிடைக்க வேண்டும் என்று முழு மனதுடன் வழிபாடு செய்யுங்கள். ஒருவேளை கன்னி தெய்வமாக இருந்தால், கன்னி தெய்வத்தின் அருளும் கிடைக்க வேண்டும் என்று முழு மனதுடன் வழிபடுங்கள். பிறகு வெல்லம் மற்றும் துணியை யாராவது ஒரு ஏழைக்கு தானமாக கொடுங்கள்.
இதையும் படிங்க: ஆடிப்பெருக்கு 2024 எப்போது..? வழிபடும் முறை மற்றும் தாலி கயிறு மாற்ற நல்ல நேரம் இதோ!
ஆடி அமாவாசை அன்று செய்ய வேண்டியவை:
ஆடி அமாவாசை நாளில் உங்களால் முடிந்த அளவிற்கு வயதானவர்களுக்கு, ஏழைகளுக்கு, ஆதரவற்றவர்களுக்கு போன்றோருக்கு அன்னதானம் வழங்குங்கள். குறைந்தபட்சம் 11 பேருக்காவது நீங்கள் உங்கள் கைகளால் அன்னதானம் வழங்கினால், முன்னோர்களின் சாபம் நீங்கும் என்பது ஐதீகம். அதுமட்டுமின்றி, உங்கள் வாழ்க்கையில் இருக்கும் தோல்விகள், கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D