ஆடிப்பெருக்கு 2024 எப்போது..? வழிபடும் முறை மற்றும் தாலி கயிறு மாற்ற நல்ல நேரம் இதோ!
Aadi Perukku 2024 : இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு எப்போது வழிபடும் முறை மற்றும் கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் என்ன என்பதற்கு இங்கு பார்க்கலாம்.
ஆடி தமிழ் மாதங்களில் ஒன்றாகும். இந்த ஆடி மாதத்தில் வரும் எல்லா நாட்களும் மிகவும் சிறப்புக்குரிய நாட்கள் ஆகும். அவற்றில் ஒன்றுதான் ஆடிப்பெருக்கு. ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதத்தின் 18 வது நாளில் கொண்டாடப்படுவது வழக்கம். இந்நாளில் ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் நீரை மக்கள் வணங்கி புனித நீராடுவார்கள்.
ஆடிப்பெருக்கு சிறப்புகள்:
ஆடிப்பெருக்கு அன்று விரதம் இருந்து நீர்நிலைகளுக்கு சென்று பூஜை செய்து வழிபட்டால், வாழ்க்கையில் செல்வம், மகிழ்ச்சி பெருகும் மற்றும் மங்களகரமான காரியங்களும் நடக்கும் என்பது ஐதீகம்.
வழிபடும் முறை:
- ஆடிப்பெருக்கு அன்று அதிகாலையிலே எழுந்து ஆற்றங்கரைக்கு சென்று மஞ்சளில் பிள்ளையாரை பிடித்து, அதற்கு அருகம்புல் படைத்து வழிபடுங்கள். பிறகு மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம் ஆகியவற்றை ஒரு வாழை இலையில் வைத்து, விளக்கேற்றி குலதெய்வத்தையும், ஓடும் நீரையும் வழிபட வேண்டும். இவற்றுன் பல வகையான உணவுகளையும் சமைத்து, அதை படைத்து வழிபடுங்கள்.
- ஒருவேளை உங்களால் ஆறுகளுக்கு சென்று ஆடிப்பெருக்கு கொண்டாட முடியவில்லை என்றால், வீட்டிலேயே பல வகையான உணவுகளைச் சமைத்து வீட்டு வாசலில் கோலம் போட்டு, தாமிரபரணி, காவேரி, வைகை போன்ற ஆறுகளை நினைத், முழு மனதுடன் வணங்கி, ஆடிப்பெருக்கைக் கொண்டாடுங்கள்.
- அதுபோல, புதிதாக திருமணமானவர்கள் ஆற்றின் கிழக்கு பார்த்து நின்று, தங்களது திருமண மாலையை ஆற்றில் விடவும். பிறகு நீராடி தங்களது திருமண வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியாகவும், எந்த ஒரு குறையும் இல்லாமல் பெருக வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: Aadi Month 2024 Tamil: சிவன் சக்தியோடு ஐக்கியமான ஆடி மாத புராண கதை.. ஆடியில் இத்தனை சிறப்புகளா?
ஆடிப்பெருக்கு பலன்கள்:
- ஆடிப்பெருக்கு அஞ்சு திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள் விரதம் இருந்து வழிபட்டால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.
- அதுபோல, புதிதாக திருமணமான பெண்கள் மற்றும் சுமங்கலி பெண்கள் ஆடிப்பெருக்கு அன்று மஞ்சள் கயிறு மாற்றிக்கொண்டால், கணவரின் ஆயுள் அதிகரிக்கும் என்பத ஐதீகம்.
- திருமணமாகியும் குழந்தை இல்லாத பெண்கள் ஆடிப்பெருக்கென்று விரதம் இருந்து வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இதையும் படிங்க: Aadi Perukku Viratham : ஆடி பெருக்கு விரதம் இருங்க..செல்வ மழை பொழியும்...வேண்டிய அனைத்தும் நிறைவேறும்..!!
2024 ஆடிப்பெருக்கு எப்போது?
இந்த 2024 ஆம் ஆண்டில் ஆடிப்பெருக்கு ஆகஸ்ட் 3ஆம் தேதி சனிக்கிழமை அன்று வருகின்றது. மேலும் இந்நாளில் மாலை 4.55 வரை சதுர்த்தி திதியும், அதன் பிறகு அமாவாசை திதியும் ஆரம்பமாகிவிடும். எனவே, காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரையும், மாலை 4.45 முதல் 5.45 வரை நல்ல நேரம் ஆகும். பகல் 1.30 முதல் 3 மணி வரை எமகண்ட நேரம் ஆகும்.
ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுவது ஏன்?
ஆடி மாதம் மழைக்காலத்தில் தொடக்கம் என்பதால், ஆறுகளில் நீர் பெருகி வரும். எனவே இந்த நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தி நல்ல விளைச்சலை காண முடியும் என்ற நம்பிக்கையில் இந்நாளில் விவசாயிகள் விதை விதைத்து, தை மாதத்தில் அறுவடை செய்வார்கள். எனவேதான், விவசாயம் குறைவில்லாமல் நடக்க, விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைத்து விவசாயம் செழித்து வளர வேண்டும் என்பதற்காகத்தான் ஆடி பெருக்கு பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D