ஜிவி பிரகாஷின் 25-ஆவது படத்துக்கு போட்டியாக இன்று (மார்ச் 7-ஆம் தேதி) திரையரங்கில் ரிலீஸ் ஆகியுள்ள, எமகாதகி படத்தின் ட்விட்டர் விமர்சனம் பற்றி பார்க்கலாம். 

நைசாட் மீடியா வொர்க்ஸ் சார்பில், வித்தியாசமான கதைக்களத்தில் எடுக்கப்படும் படங்களை பார்க்க நினைக்கும் ரசிகர்களுக்கு தீனி போடும் விதமாகவே அறிமுக இயக்குனர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் எமகாதகி திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.

ஒரு பெண் தற்கொலை செய்யும் போது அவரைப் பற்றி அந்த ஊர் என்ன பேசுகிறது? ஒரு பெண்ணின் தற்கொலை எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது? அவளின் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது பற்றி ஒரு பெண்ணின் பிணமே அவளுக்காக போராடும் வித்தியாசமான கதைகளத்தில் இந்த படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர்.

இந்த படத்தில் ஹீரோயினாக ரூபா கொடுவையாரு நடிக்க, youtube பிரபலமான நரேந்திர பிரசாத் கதாநாயகனாக நடித்துள்ளார். கீதா கைலாசம் கதாநாயகியின் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க, சுபாஷ் ரங்கசாமி, ஹரிதா, பிரதீப் துரைராஜ், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சுஜித் சாரங் இந்த படத்திற்கு படத்தொகுப்பு செய்ய, ஸ்ரீஜித் சாரங் இந்த படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார். ஜெசின் ஜார்ஜ் எமகாதகி படத்துக்கு இசையமைத்துள்ளார். இவர் இதற்கு முன்பு மலையாளத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான ஆஷா பிளாக் திரைப்படத்திற்கு இசையமைத்தவர். அதேபோல் ப்ளே பேக் சிங்கராகவும் இருந்து வருகிறார். இவரின் பின்னணி இசை அதிகம் பாராட்டப்பட்டாலும், இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை. வித்தியாசமான கண்ணோட்டத்தோடும், கதைகளத்தோடும் இயக்கப்பட்டுள்ள இந்த படம் குறித்த twitter விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.

Scroll to load tweet…

இதில் ட்ரைலரிலேயே காட்டின மாதிரி ஒரு பொண்ணோட பிணம் அந்த வீட்டை விட்டு நகர மறுக்குது.. எவ்வளவு பேர் தூக்கியும் அந்த பிணத்தை அப்புறப்படுத்த முடியல அந்த வீட்லருந்து.. அது ஏன் அப்டின்றது தான் மீதி படம்.. கிராமத்து சாங்கியம், சடங்குகள், மனிதர்கள், கலாச்சாரம், Mythology, Folklore, படிநிலைகள், காதல் அப்டினு அத்தனை விஷயங்களையும் திரைக்கதைல கோர்த்ததும், உயிரோட்டமா அதை காட்சியா எழுதினதுலயும் Writer/ Director பெப்பின் முதல் படத்துலயே ஒரு Masterpiece Script ஓட களமிறங்கி இருக்காரு.. கண்டிப்பாக இந்த படம் பெரிய அளவில் பெரிய இயக்குனர்களின் படங்களோடு ஒப்பிட்டு பேசப்படும்.

சிறப்பான கலைப்படைப்புகள் எல்லாமே மக்களுக்கு சுலபமாக புரியும்படியாவும், உணர்வுப்பூர்வமா ஒட்டும்படியாவும் அமைந்து வந்துடாது எல்லா படங்கள்லயும்.. ஆனா இந்த படம் அவ்வளவு உணர்வுப்பூர்வமா நம்மளையும் அதுகூட சேர்த்து பயணிக்க வைக்குது.. 10 நிமிஷமே வந்தாலும் அவ்ளோ உயிர்ப்போடு கவித்துவமா வர்ற காதல் காட்சிகள், அங்கங்க வந்தாலும் சிரிப்பை வரவைக்கற அந்த குடிகார கேரக்டர், Peak Interval Block ல வர்ற Horror காட்சிகள், மையக்கதை பேசக்கூடிய முக்கியமான அரசியல்னு எல்லா ஏரியாலயும் Writing ல அத்தனை சிறப்பான Work பண்ணிருக்காங்க Writer / Director Pepin George and Dialog Writer S.Rajendran.. 

அந்த பிணத்தோட முகம் படம் நெடுக எப்படி வெச்சுக்கணும் ஒருமாதிரி சிரிச்சிட்டே நக்கலா இருக்கற மாதிரி, பிணம் எழுந்து உட்கார்ற காட்சி படமாக்கப்பட்ட விதம், அந்த Brilliantly Crafted Interval Sequence, அந்த climax Scene ஓட Poetic Staging னு Direction ல அத்தனை இடங்கள்ல Pepin George அற்புதமான Work பண்ணிருக்காப்ல தன் முதல் படத்துலயே என இந்த படம் பற்றி புகழ்ந்து தள்ளியுள்ளார்.

Scroll to load tweet…

மற்றொருவர் எமகாதகி படத்திற்கு 5-க்கும் 3.5 மதிப்பீடு கொடுத்து, "தமிழ் சினிமாவில் நாம் காணும் அமானுஷ்ய படங்களில் இருந்து மாறுபட்ட ஒரு தனித்துவமான திகில் த்ரில்லர் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் பெப்பின். க்ளைமாக்ஸில் உங்களை உணர்வுபூர்வமாக நகர்த்தும் முற்போக்கான செய்தியுடன் படத்தை தொகுத்துள்ளார், மேலும் திரைக்கதை கோ என்ற வார்த்தையிலிருந்து கைது செய்கிறது. மர்மங்கள் ஒவ்வொன்றாக வெளிவரும் ஒரு புலனாய்வு த்ரில்லராகவும் படம் மாறுகிறது.

ரூபா தன்னுடைய நடிப்பை எதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளார். கீதா கைலாசம் நடிப்பில் நெகிழ வேட்கிறார். அவர் கலங்கி அழும் காட்சிகள் மனதை உருக வைக்கிறது. சிறு பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட தரமான படம் என, ஒட்டுமொத்த படக்குழுவையும் பாராட்டியுள்ளார்.

Scroll to load tweet…

எமகாதகி பற்றி இயக்குனர் அமீர் கூறும்போது, நம்மை சுற்றி நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட சிறிய படம். புதுமுகங்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இதை பெரிய ஹிட்டாக்க வேண்டியது மீடியாக்கள் மற்றும் ரசிகர்களின் கடமை என தெரிவித்திருந்தார். இதை ரமேஷ் பாலா தெரிவித்துள்ளார். 

மொத்தத்தில் சிறந்த விமர்சனங்களால், ரசிகர்களால் கவனிக்கப்படும் படமாக எமகாதகி மாறியுள்ளது. முதல் நாளில் பெரிய ஓப்பனிங் கிடைக்கவிலை என்றாலும், படம் பாராட்டுகளை பெற்று வருவதால், இந்த படத்திற்கு ரசிகர்கள் தங்களின் ஆதரவை கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.