அறிமுக இயக்குனர் வினோத் நடிப்பில் விஷால், சுனைனா, ரமணா நடிப்பில் வெளியாகி இருக்கும் லத்தி திரைப்படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

விஷால் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் லத்தி. இப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்துள்ளார். ரமணா மற்றும் நந்தா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது.

லத்தி படம் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். விஷால் நடிப்பில் வெளியான கடந்த சில படங்கள் படுதோல்வியை சந்தித்தன. இந்த லத்தி படம் மூலம் விஷால் கம்பேக் கொடுத்தாரா என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

படம் பார்த்த் நெட்டிசன் ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “ஒவ்வொரு படத்திலும் விஷாலின் கடின உழைப்பு தெரிகிறது. ஆனால் கதை தேர்வில் கோட்டைவிட்டு விடுகிறார். ஸ்டண்ட் டீமுக்கு பாராட்டுக்கள். ஆக்‌ஷன் காட்சிகளில் மெனக்கெட்டு விஷால் நடித்திருந்தாலும், பலவீனமான திரைக்கதை லத்தியை ஒரு சாதாரணமான படமாக்கிவிட்டது” என குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…

மற்றொரு பதிவில், “ லத்தி ஹீரோ மற்றும் வில்லன் இடையேயான மோதலுடன் கூடிய கமர்ஷியல் ஆக்‌ஷன் திரைப்படம். முதல் பாதி நன்றாக இருக்கிறது., இரண்டாம் பாதியில் 80% ஆக்‌ஷன் காட்சிகளுடன் நிரம்பியுள்ளது. விஷால் சிறப்பாக நடித்துள்ளார். ரமணாவின் அறிமுகக் காட்சி நன்றாக இருந்தது. படத்தின் திரைக்கதை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்” என பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

மற்றொரு நெட்டிசன் போட்டுள்ள டுவிட்டில், “லத்தி ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படம். வில்லன்களிடம் மாட்டிக்கொண்ட ஹீரோ எப்படி தப்பிக்கிறார் என்பதே கதைக்களம். விஷாலின் அர்ப்பணிப்பு சூப்பர். யுவனின் இசை படத்திற்கு உதவவில்லை. சண்டைக் காட்சிகளும் படத்தின் கிளைமாக்ஸும் விறுவிறுப்பாக உள்ளது. டயலாக் மற்றும் பாடல்கள் பின்னடைவை ஏற்படுத்துகிறது. படம் இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம். சராசரியாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…

இன்னொரு டுவிட்டில், “லத்தி படத்தில் விஷாலின் நடிப்பு சூப்பராக உள்ளது. இரண்டாம் பாதி சரியில்லை. சண்டைக் காட்சிகள் அருமையாக உள்ளது. அது அதிகம் உள்ளதே படத்திற்கு மைனஸாக அமைந்துள்ளது. சராசரி படம் தான்” என பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…
Scroll to load tweet…

மேற்கண்ட விமர்சனங்களை பார்க்கும் போது லத்தி திரைப்படம் கலவயான விமர்சனங்களையே பெற்று வருகிறது. விஷாலின் கம்பேக்கிற்காக காத்திருக்கும் சூழல் தான் உள்ளது போல தெரிகிறது.

இதையும் படியுங்கள்... ஓட்டு விஷயத்தில் பிக்பாஸ் வைத்த திடீர் டுவிஸ்ட்... அப்போ இந்த வாரம் எலிமீனேட் ஆகப்போறது இவங்கதானா?