பழம்பெரும் நடிகரும்,  நாடக மேடை கலைஞருமான தின்யர் கான்ட்ராக்டர் மறைவிற்கு மோடி,  ஸ்மிருதிராணி, உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரைபிரபலங்களும், ரசிகர்களும்  தொடர்ந்து தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

கருப்பு - வெள்ளை, திரைப்பட காலங்களில் இருந்து பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைத்து நடித்துள்ளவர் தின்யர் கான்ட்ராக்டர். 

ஷாருக்கான் நடித்த பாட்ஷா, அக்ஷய் குமாருடன் கில்லாடி போன்ற பல வெற்றி படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது 79 வயதாகும் இவர்,  கடந்த சில வருடங்களாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று மும்பையில் காலமானார். இவரின் மறைவிற்கு பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் ஸ்மிருதிராணி உள்ளிட்டோர் தங்களுடைய இரங்கலை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.   

தின்யர் கான்ட்ராக்டர் திரைப்படங்கள், மேடை நாடகங்கள்,  தொலைக்காட்சி தொடங்களில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.  மேலும் இவருக்கு கடந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.