சில நேரங்களில் ராஜாவே சேனாதிபதியாக மாறி போர்க்களம் புக வேண்டியிருக்கும். எதிரிகளை அழித்து போரை வென்று மீண்டும் ராஜாவாக பொறுப்பேற்றுக்கொள்வார் இதுதான் படத்தில் கதை கரு.  உலக கேங்க்ஸ்டர்களின் தலை நகரமான வாஜி என்ற நகரத்தின் சக்கரவர்த்தி ராய் (ஜாக்கி ஷெராஃப்). அவர் தலைமை வகிக்கும் கேங்க்ஸ்டர்களின் சிண்டிகேட் அமைப்பை, சட்டபூர்வமாக மாற்றிவிட்டு மும்பை வரும் ராய் கொல்லப்படுகிறார். இதனால் 25 ஆண்டு காலம் ரகசியமாய் வளர்க்கப்படும் ராயின் மகன் அருண் விஜய் அடுத்த சக்கரவர்த்தியாக அரியணையில் அமர்கிறார். 

இது தேவராஜ் எனும் முன்னாள் டானின் மகனுக்குப் பிடிக்கவில்லை.ராய் சாம்ராஜ்ஜியத்திற்கு சொந்தமான 2 லட்சம் கோடி ரூபாய் பணம் அந்நகரத்தின் கரூவூலத்தில் இருக்கின்றது. அது ‘பிளாக் பாக்ஸ்’ எனும் கருவி இல்லாமல் திறக்காது. அது யாரிடம் இருக்கிறதோ அவர் தான் சக்கரவர்த்தி.


 
அந்த பிளாக் பாக்ஸ் மும்பையில் இருக்கின்றது. அதிகாரிகளான பிரபாஸ், ஷ்ரத்தா டீம் மும்பை வங்கி கொள்ளையில் ஈடுபட்டவனை (நீல் நிதின் முகேஷ்) திட்டமிட்டு நெருங்க, அவனும் இதே ‘பிளாக் பாக்ஸை’ நோக்கிப் பயணிக்கிறான். திட்டமிட்டபடி கொள்ளையனுக்கு முன் பிளாக் பாக்ஸை கைப்பற்றுகிறார் ஹீரோ பிரபாஸ். ஆனால், ஒரு ட்விஸ்ட். பிரபாஸ் அதிகாரியில்லை. அவர் தான் கொள்ளையன் என்பது சஸ்பென்ஸ். நீல் நிதின் தான் உண்மையான ஆபிசர் என்பதுடன் முதல் பாதி படம் முடிய இண்டர்வெல் வருகிறது. 

பெரிதாக ஏதோ சொல்லப்போகிறார்கள் என எதிர்பார்ப்புடன் தொடங்கும் சாஹோ-வில் அடுத்த பாதியில், பல குழப்பங்கள்...பல திருப்பங்கள்... எனப் பார்வையாளர்களை கசக்கி பிழிகிறது. திக்கு முக்காட வைத்து விடுகிறது. பர்ஸ்ட் ஹாஃப்பில், முதல் 20 நிமிடங்களும் கடைசி 10 நிமிடங்களையும் என பயங்கர ட்விஸ்ட். இரண்டாம் பாதியில் க்ளைமாக்ஸ் சண்டை காட்சிகள் மற்றும் கடைசி டிவிஸ்ட் மேல டிவிஸ்ட் என அத்தனையும் சூப்பர் ரகம், மற்ற இடங்கள் கொஞ்சம் வேகத்தடை தான். அதுவும் பிரபாஸ், ஸ்ரத்தா காதல் காட்சிகள் மிகப்பெரிய வேகத்தடை. 

சங்கி பாண்டே, அருண் விஜய், ஜாக்கி ஷெரஃப், மந்த்ரா பேடி, நீல் நிதின் முகேஷ், லால் உள்ளிட்டோர் கெஸ்ட் அப்பியரென்ஸ் போல் வந்து போகிறார்கள். ஆனால், நம்ம ஊரு அருண் விஜய் மட்டும் பக்கா மாஸ்,  அதிலும் அவரது இன்ட்ரோ ஸீன் சான்ஸே இல்ல மிரட்டுகிறார்.

ஒரு அரியணைக்கான போர் தான் சாஹோ. சக ஆபீஸராக வரும் அழகு பொம்மை  ஸ்தரத்தா, ரொமான்ஸ் மட்டும் தான் என இல்லாமல், ஆக்ஷன் காட்சிகளிலும் அசத்துகிறார். ஆக்ஷன் காட்சிகளும், அசத்தலா ஹாட் லுக்கில் பிரபாஸை மட்டுமல்ல நம்மையும் கட்டிப்போடுகிறார்.  

படத்துக்கு பெரிய ப்ளஸ் மதியின் ஒளிப்பதிவு, படத்தை தூக்கிப் பிடிக்கிறது. ஒவ்வொரு பிரேமிலும் அத்தனை மிரளவைக்கும் பிரமாண்டம், ஸ்டண்ட் காட்சிகள் விளையாடிய கேமரா. அதிலும் க்ளைமாக்ஸ் கார், பைக், ஹெலிகாப்டர், கண்டெய்னர் டிரக் என தெறிக்கவிட்டுள்ளார். ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் சண்டை காட்சிகளில் மட்டும் கலக்குகிறது. பிராமாண்டம், விஷுவல் எபக்ட்ஸ்களில் செலுத்திய கவனத்தை, கதையிலும், திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளது. பலவீனமே மனதில் பதியாத கதாபாத்திரங்கள், பெரிதும் ஒட்டாத பிரபாஸ்-ஷ்ரத்தா கெமிஸ்ட்ரி என சொல்லலாம். 

தொழில் நுட்ப ரீதியாக படம் சிறப்பாக வந்துள்ளது எனக் கூறலாம். மதியின் ஒளிப்பதிவு, சாபு சிரில் அரங்கு, கமலக்கண்ணனில் வி.எஃப்.எக்ஸ், சண்டைப் பயிற்சி இயக்குநர்கள் என அனைவரும் உழைப்பை கொட்டியிருக்கிறார்கள் சாஹோவில் ஓஹோ சொல்லவைத்துள்ளது.  அசரவைக்கும் ஆக்‌ஷன், பிரம்மாண்டம், ஓவர்-லோட் செய்யப்பட்ட ஹீரோயிசம் என ரசிகனை திருப்தி படுத்தியதென்றே சொல்லலாம்.

மொத்தத்தில் சாஹோ ஓஹோ தான்!