லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா, சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘மாஸ்டர்’. கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகி இருக்க வேண்டிய இந்த திரைப்படம் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போனது அனைவரும் அறிந்தது தான்.

தீபாவளிக்காவது 'மாஸ்டர்' வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சினாலும், பொங்கலுக்கு கில்லியாக திரையரங்கில் வெளியாகிறது மாஸ்டர் திரைப்படம். பொங்கல் விருந்தாக ஜனவரி 13ம் தேதி படத்தை வெளியிடுவதாக அதிகாரப்பூர்வ படக்குழு அறிவித்துள்ளது. 

இதனிடையே தமிழக அரசும் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்த போதிலும், கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள், மற்றும் மருத்துவர்கள் வலியுறுத்தி வருவதாலும், 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது என வழக்கு தொடர்ந்துள்ளதாலும், எந்த அளவிற்கு இது சாத்தியம் என்பது தெரியாமல் உள்ளது.

மேலும் மத்திய அரசும் 100 சதவீத பார்வையாளர்களை திரையரங்கில் அனுமதிக்க தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை திரும்ப பெறவேண்டும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில் 'மாஸ்டர்' படக்குழுவினர் தினமும் சரியாக 6 மணிக்கு புதிய புரோமோ ஒன்றை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் இன்று, மாளவிகா மோஹனனுடன் சும்மா அப்படி ஒரு எப்படி வந்தது என்பதை, செம்ம ரொமான்டிக்காக விஜய் வெளிப்படுத்துவதும், மாளவிகா மோஹனனின் காதல் ரசம் பொங்கும் காட்சிகளும் தான் தற்போது புரோமோவாக வெளியாகியுள்ளது.

 அந்த புரோமோ இதோ...