Ponniyin selvan Review : கல்கியை போல் கலக்கினாரா மணிரத்னம்...? பொன்னியின் செல்வன் படத்தின் விமர்சனம் இதோ
Ponniyin selvan-1 : மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் டுவிட்டர் விமர்சனம் இதோ.
மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ளது. கல்கியின் நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் இன்று வெளியாகி உள்ளது. அப்படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.
பொன்னியின் செல்வன் முதல் பாதி நன்றாக இருந்ததாக குறிப்பிட்டுள்ள நெட்டிசன் ஒருவர், மணிரத்னத்தின் திரைக்கதை சூப்பர் என்றும் பெருமையாக இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி பிரம்மாண்ட காட்சியமைப்பு, ஏ.ஆர்.ரகுமானின் இசை அருமை என பதிவிட்டுள்ள அவர் கார்த்தியில் நடிப்பு செம்மயாக இருப்பதாகவும், திரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் விக்ரமின் நடிப்பையும் பாராட்டி உள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்தின் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் குறித்து நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார். அதன்படி இப்படத்தில் கார்த்தி மற்றும் சியான் விக்ரமின் நடிப்பு, ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள் மற்றும் பின்னணி இசை, கதை, காட்சியமைப்பு, பிரம்மாண்ட தயாரிப்பு ஆகியவை பாசிட்டிவ் என்றும் சில இடங்களில் தொய்வு ஏற்படுவது நெகட்டிவ் என்றும் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு நெட்டிசன் போட்டுள்ள பதிவில், பொன்னியின் செல்வன் புத்தகத்தை படிக்காதவர்களுக்கு இப்படத்தில் உள்ள கதாபாத்திரங்கள் புரிவதற்கு சற்று கஷ்டமாக இருக்கும் என்றும் 2 முறை பார்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
டுவிட்டரில் நெட்டிசன் ஒருவர் போட்டுள்ள விமர்சனத்தில், பொன்னியின் செல்வன் பிளாக்பஸ்டர் சரித்திர கதை என்றும் கார்த்தி மற்றும் விக்ரமின் நடிப்பு பிரமாதமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி பலம்வாய்ந்த திரைக்கதை, ஏ.ஆர்.ரகுமானின் இசை மற்றும் ரவி வர்மனின் ஒளிப்பதிவு ஆகியவை பிளஸ் ஆக அமைந்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.
முதல் பாதி, என்ன ஒரு அனுபவம். வாவ் என ஒருவர் பதிவிட்டுள்ளார். அதேபோல் மற்றொரு பதிவில், எதிர்பார்த்தபடியே வந்தியத்தேவன் அமர்களப்படுத்தி இருக்கிறார். கார்த்தி அந்த கதாபாத்திரத்தில் பின்னி பெடலெடுத்து இருக்கிறார். நன்றி மணி சார் என குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு நெட்டிசன் போட்டுள்ள பதிவில், “பொன்னியின் செல்வன் வரலாறு படைத்துள்ளது. புத்தகம் படிக்காதவர்களுக்கு கதாபாத்திரம் புரியும் வண்ணம் முதல் பாதி சிறப்பாக எடுக்கப்பட்டு உள்ளது. மணிரத்னம் எப்பவுமே லெஜண்ட் தான். ஏ.ஆர்.ரகுமானின் இசை வெறித்தனமாக இருப்பதாகவும், கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய் மற்றும் திரிஷாவின் நடிப்பு மிரட்டல் என்றும் பதிவிட்டுள்ளார்.
மேற்கண்ட பதிவுகளை பார்க்கும் போது படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்து வருகின்றன.
இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வன் FDFS பார்க்க குதிரையில் கூலாக எண்ட்ரி கொடுத்த கூல் சுரேஷ் - வைரலாகும் போட்டோஸ்