நயன்தாரா  நடிப்பில் உருவாகியுள்ள 'கனெக்ட்' திரைப்படம் இன்று வெளியான நிலையில்... இந்த படம் குறித்து ரசிகர்கள் கூறியுள்ள ட்விட்டர் ரிவ்யூ குறித்து இந்த பதிப்பில் பார்ப்போம். 

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடித்துள்ள 'கனெக்ட்' திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியானது. இன்று காலை ரசிகர்களுக்காக காலை 5 மணிக்கே சிறப்பு காட்சி திரையிடப்பட்ட நிலையில், படத்தை பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து, இப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

இடைவெளியே இல்லாமல் ஓடும் இந்த படத்தில் பல எதிர்பாராத திருப்பார்கள் மற்றும் திக் திக் அனுபவங்களை ரசிகர்களுக்கு வழங்குவதாக, காலையிலேயே இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களின் அனுபவங்களை, சமூக வலைதளத்தின் மூலம், தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில், நயன்தாரா தன்னுடைய அசத்தல் நடிப்பால் ரசிகர்கள் மனதை ஆக்ரமித்துள்ளதாக தெரிவித்து வருகிறார்கள்.

இந்த படத்தில், நயன்தாராவுக்கு ஜோடியாக நடிகர் வினய் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், பாலிவுட் நடிகர் அனுபம் கேர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில், நயன்தாரா நடித்துள்ளது மட்டும் இன்றி, தன்னுடைய கணவருடன் சேர்ந்து தயாரித்தும் உள்ளார். மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த படம் குறித்து ரசிகர்கள் பகிர்ந்து கொண்டுள்ள பதிவுகளை பார்ப்போம்...

Scroll to load tweet…

ஹாலிவுட் தரத்தில் 'கனெக்ட்' படம் உள்ளதாகவும், நயன்தாரா தன்னுடைய எளிமையாயாகவும், கம்பீரமாகவும் தன்னுடைய நடிப்பை வெளிப்பதியுள்ளதாக கூறியுள்ளார். மேலும் நீண்ட நாட்களுக்கு பின்னர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படங்களில் ஒரு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Scroll to load tweet…

மிகவும் எளிமையான கதை தான், ஆனால் அஸ்வின் இப்படத்தை தன்னுடைய தரத்திற்கு எடுத்துள்ளார். ஹாரர் படம் பார்க்க பிடித்தவர்கள் கண்டிப்பாக திரையரங்கம் சென்று பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…

ஒரே வார்த்தையில் இந்த படத்தை பிளாக் பஸ்டர் என விமர்சனம் செய்துள்ளார் இந்த ரசிகர்கர்.

Scroll to load tweet…

சிலர் இந்த படத்தை நெகடிவாகவும் விமர்சனம் செய்து வருகிறார்கள். மாயா, கேம் ஓவர் போன்ற படங்களை இயக்கிய... அஸ்வின் சரவணன் படமா இது? என ரசிகர் ஒருவர் ஆச்சர்யமாக கேட்டுள்ள பதிவு தான் இது.

Scroll to load tweet…

கனெக்ட் என்னைப் போன்ற ஹாரர்-த்ரில்லர் வகையைப் பார்த்து பயப்படுபவர்களுக்கான திரைப்படமாக , நாங்கள் அதைப் பார்க்கிறோம். இது ஒரு எளிய கதை, அதனை நன்றாக இயக்கியுள்ளார் அஸ்வின் சரவணன். தொழில்நுட்ப ரீதியாக இது ஒரு சிறந்த படம். கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருந்தால் மாயா மற்றும் கேம் ஓவர் போன்ற சிறந்த படமாக இது அமைத்திருக்கும் என தெரிவித்துள்ளார்.
இப்படி தொடர்ந்து கனெக்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.