போலி சாதி ஒழிப்பு, மாற்று சாதி இளைஞர்களால் ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் பாதிக்கபட்டுருப்பதை திரெளபதி திரைப்படம் நமக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
போலி சாதி ஒழிப்பு, தலித் இளைஞர்களால் ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் பாதிக்கபட்டுருப்பதை திரெளபதி திரைப்படம் நமக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
மனைவியையும், மைத்துனியையும் ஆணவக் கொலை செய்த வழக்கில் கைதாகிறார் நாயகன் ரிச்சர்ட். அவர் ஜாமினில் வெளியில் வந்து அந்தக்கொலைகளில் உள்ள மர்மத்தை வெளிப்படுத்துகிறார். அது என்ன மர்மம்? என்பதுதான் மொத்த படமும். இந்தப்படத்தின் டீசர் வெளியானபோதே, “சாதிக்கலவரத்தைத் தூண்டும் படம்!”என்றும், “இல்லை.. நாடகக்காதலை அம்பலப்படுத்தும் படம்!”என்றும் இருவேறு கருத்துக்கள் இருவேறு சமூக மக்களிடையே சமூகவலைதளங்களில் பரவின. படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் சிலர் கோரினர்.

அதை அந்த பெண்ணின் தந்தைக்கு அனுப்ப, அவர் விரக்தியில் தற்கொலை செய்துகொள்கிறார். தவிர, அந்த கல்லூரி மாணவி, அவரது அக்கா திரவுபதி ஆகியோரைக் கொல்கின்றனர் வில்லன்கள். “மனைவியின் தங்கை வேற்று சாதியைச் சேர்ந்தவரை காதலித்து பதிவுத் திருமணம் செய்ததால், அக்காள் கணவரான பிரபாகரனே அந்தப்பெண்ணை ஆணவக்கொலை செய்துவிட்டார்” என கைது செய்யப்படுகிறார் பிரபாகரன். சிறையில் இருந்து ரிலீசாகும் அவர், வில்லன்களை கொல்வதோடு, போலியான பதிவுத்திருமணங்கள் நடந்ததை அம்பலப்படுத்துகிறார்.

பிரபாகரனாக வரும் ரிச்சர்ட் ரிஷி, இயல்பான சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கிராமத்து மனிதர்களுக்கே உண்டான கனிவு, கம்பீரம் என அசத்தியிருக்கிறார். மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்பதை அறிந்தவுடன் வெளிப்படுத்தும் மகிழ்ச்சி, அவர் உயிருக்குப் போராடுவதைப் பார்த்து கதறுவது. வில்லனை கொல்லும்போது வெளிப்படும் கோபம் என கனஜோர். திரவுபதியாக வரும் ஷீலாவின் முகபாவம், கிராமத்துப் பெண் கதாபாத்திரத்துக்கு கச்சிதம் வில்லன்கள், ரிச்சர்ட் நண்பராக வருபர், சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் முதியவர் என பல கதாபாத்திரங்கள் தனது பங்களிப்பை செய்திருக்கின்றனர்.
கதாநாயன் டீ கிளாசை கையாலேயே அமுக்கி நொறுக்குவது, இட்லி கடை பெண்ணின் கவர்ச்சி நடனம், என மசாலா வகைகள் சில இருந்தாலும் இயன்றவரை இயல்பாக, நம்பும்படியாக திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் மோகன். தனக்கென ஒரு கருத்தை வைத்திருந்தாலும், அதை சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் சொல்லி ரசிக்கவைக்கிறார். படத்தில் வரும், ’சரக்கு முறுக்கு..’அவனுங்க ஒரே கூட்டம்.., அவனுங்களுக்கு ஆதரவாத்தானே சட்டம் இருக்கு... வசனங்கள் வெளிப்படையாகவே குறிப்பிட்ட சமுதாயத்தினரை தாக்குவதை போல அமைந்துள்ளன.

“அப்பாவிப் பெண்களை மயக்கி நாடகக்காதல் செய்து ஏமாற்றுவதற்கு மாவட்டத்துக்கு நூறு பேரை வைத்திருக்கிறோம்..”போன்ற வசனங்கள் குறிப்பிட்ட சாதியினரையும்,, “நம்ம வம்சம் எப்படிப்பட்டது..”, “நம்ம பின்னால பெரிய சமுதாயமே இருக்கு..” போன்ற வசனங்கள் தான் சார்ந்த சாதியினரையும் குறிப்பதை வெளிப்படையாகவே அறிய முடிகிறது.
படத்தின் கருத்தில் மாறுபாடு உள்ளவர்கள் இருக்கலாம். ஆனால், தான் எடுத்துக்கொண்ட விசயத்தை திரைமொழிக்கு உட்பட்டு சுவாரஸ்யமாக உருவாக்கும் வித்தையில் சிறந்தவராக இருக்கிறார் இயக்குனர் மோகன். சுருக்கமாக சொன்னால் பரியேறும் பெருமாள், அசுரன் படங்களில் சொன்னவை உண்மை என்றால் திரெளபதி படத்தில் சொல்லப்பட்டதும் உண்மைதான். பரியேறும் பெருமாள், அசுரன் படங்களில் சொல்லப்பட்டது பொய் என்றால் திரெளபதி படத்தில் சொன்னதும் பொய்தான்.
