தனுஷின் நானே வருவேன் மிரட்டலா? சொதப்பலா? கம்பேக் கொடுத்தாரா செல்வராகவன்? - விமர்சனம் இதோ
Naane varuven Review : செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், இந்துஜா நடிப்பில் வெளியாகி இருக்கும் நானே வருவேன் படத்தின் டுவிட்டர் விமர்சனம் இதோ.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படம் இன்று உலகமெங்கும் ரிலீசாகி உள்ளது. கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இப்படத்திற்கு தனுஷ் தான் கதை மற்றும் திரைக்கதை எழுதி உள்ளார். 11 ஆண்டுகளுக்கு பின்னர் தனுஷ், செல்வராகவன் கூட்டணியில் உருவாகி உள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இப்படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அதன்படி படம் பார்த்த நெட்டிசன் ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “ நானே வருவேன் படத்தின் முதல் பாதி சுவாரஸ்யமாக இருந்தாலும், இரண்டாம் பாதி சராசரியான ஒன்றாகவே அமைந்துள்ளது. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை தவிர இப்படத்தில் இருந்து எடுத்து செல்வதற்கு வேறொன்றும் இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு டுவிட்டர் பதிவில், முதல் பாதில் சூப்பராக இருந்ததாகவும், குறிப்பாக இண்டர்வல் வெறித்தனமாக இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ள அவர், இரண்டாம் பாதி ஓகே ரகம் தான் என பதிவிட்டுள்ளார். கிளைமாக்ஸ் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம். படத்தின் பலம் தனுஷின் நடிப்பு மற்றும் யுவனின் இசை என பதிவிட்டுள்ளார்.
நெட்டிசன் ஒருவர் இப்படத்தின் பாசிட்டிவ் மற்றும் நெகடிவ் ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளார். அதன்படி நானே வருவேன் படத்தில் தனுஷின் கதிர் கதாபாத்திரம், பின்னணி இசை, திரைக்கதை, கதைக்கரு, படத்தின் நீளம் மற்றும் ஒளிப்பதிவு ஆகியவை பாசிட்டிவ் என்று குறிப்பிட்டுள்ள அவர், 2,3 காட்சிகள் சலிப்பை ஏற்படுத்துவது தான் மைனஸ் என பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், மெதுவாக நகரும் திரைக்கதையுடன் கூடிய ஒரு நேர்த்தியான திரில்லர் படம். சைக்கோ மற்றும் ஹாரர் கதையம்சம் கொண்ட படம் இது. முதல் பாதி நன்றாக இருக்கிறது. இரண்டாம் பாதி சராசரியாக உள்ளது. எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி போனால் நிச்சயம் நல்ல படமாக இருக்கும். தனுஷின் கதிர் கேரக்டர், யுவனின் பின்னணி இசை பலம் சேர்த்து உள்ளது. ஒருமுறை பார்க்கலாம் என பதிவிட்டுள்ளார்.
தயாரிப்பாளர் தாணுவை பாராட்டி நெட்டிசன் போட்டுள்ள பதிவு ஒன்றில், “படத்துல நடிச்சவங்கள இன்டர்வியூ கொடுக்க விட்டா படத்தோட சஸ்பென்ஸ் எல்லாம் சொல்லிடுவாங்கனு யாரையும் இன்டர்வியூ கொடுக்க விடாம., ரசிகர்களுக்கு தியேட்டர் ல முழு விருந்து கொடுத்துருக்கார் கலைப்புலி தாணு” என பாராட்டியுள்ளார்.
மற்றொரு டுவிட்டர் விமர்சனம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளதாவது : “வழக்கமான பழிவாங்கும் கதை... தனுஷின் நடிப்பு, யுவனின் பின்னணி இசை தவிர படத்தில் எதுவும் ஸ்பெஷலாக இல்லை. ஏமாற்றமளிக்கிறது” என பதிவிட்டுள்ளார்.
நெட்டிசன் ஒருவர் போட்டுள்ள பதிவில், நானே வருவேன் படத்தின் முதல் பாதி நேர்த்தியாக இருந்தாலும், இரண்டாம் பாதி சொதப்பலாக உள்ளது. செல்வராகவனின் கம்பேக்கிற்காக இன்னும் காத்திருக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
மேற்கண்ட விமர்சனங்களை பார்க்கும் போது, நானே வருவேன் படம் சற்று கலவையான விமர்சனங்களையே பெற்று வருவது தெரிகிறது.
இதையும் படியுங்கள்... தனுஷ் ரசிகர்களின் எல்லைமீறிய கொண்டாட்டத்தால் மக்கள் அவதி... அரசு பேருந்தை மறித்து அட்ராசிட்டி செய்த வீடியோ இதோ