பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம், சேரன் தான் வெளியேற அதிக வாய்ப்பு உள்ளது என மக்களும், ஊடகங்களும் கணித்தபடியே இந்த வாரம் சேரன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியிருகிறார். இது தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ மூலம் தெரியவந்துள்ளது.

தொகுப்பாளர் கமலஹாசன் வெளியேற்றப்பட்டால் என்ன நினைப்பீர்கள் என கேள்வி எழுப்ப, அதற்கு பதில் அளித்த சேரன், புதிய அனுபவம் வேண்டும் என்பதற்காக வந்தேன். அது நிறைவேறி விட்டது என கூறுகிறார். 

உடனடியாக கமல் தன்னிடம் உள்ள எலிமினேஷன் கார்டில் சேரன் பெயர் எழுதி இருப்பதை காட்டி, வெளியே வர சொல்கிறார் . சேரனும் வெளியேற தயாராகிறார். சேரன் வெளியேறும் செய்தியை கேட்டு, சில நிமிடம் கண் மூடாமல் சேரனையே பார்க்கும் லாஸ்லியா, அவர் கையை பிடித்துக்கொண்டு , நீங்கள் இங்கு இருக்கணும் நான் தான் போகணும் என, ஏதாவது பிரச்சனை வந்தால் , நான் போறேன்... நான் போறேன்... என்கிற டயலாக்கை கண்ணீரே வராமல் அழுது பேசியுள்ளார். 

அந்த ப்ரோமோ இதோ...