விஜய் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருந்த, விஜய் மற்றும் நயன்தாராவின் காதல் பாடலான, 'உனக்காக' பாடல் வெளியாகி சமூக வலைத்தளத்தையே தெறிக்க விட்டு வருகிறது.

விஜய் மூன்றாவது முறையாக அட்லீ இயக்கத்தில்  நடித்து முடித்துள்ள, 'பிகில்' படத்தை பற்றிய ஒவ்வொரு அப்டேட்களையும், ரசிகர்கள் வரவேற்க வழி மீது விழி வைத்து காத்திருக்கிறார்கள்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் விதமாக, படக்குழுவும் அடுத்து அடுத்து, ஏதேனும் ஒரு தகவலை வெளியிட்டு... ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் நேற்றைய தினம், இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி... நாளை வெளியாக உள்ள இசை வெளியீட்டு விழா குறித்த, தகவலை வெளியிட்டு விஜய் மாஸ் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

இந்த போஸ்டர் வெளியான சில நிமிடங்களை பல்லாயிரம் லைக்குகளை அல்லி குவித்தது. இந்நிலையில் இன்றைய தினம் இப்படத்தின் இயக்குனர் அட்லீ... இன்று சரியாக 4 : 30  மணிக்கு, உனக்காக லிரிக்கல் பாடல் வெளியாகும் என அறிவித்திருந்தார்.

தற்போது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த அந்த பாடல் வெளியாகியுள்ளது,

அந்த பாடல் இதோ...